Primary tabs
பாடம் 1
P20341 : தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள்
(IT Enabled Services - ITES)இந்தப் பாடம் உலகப் பொருளாதார வளர்ச்சிப் போக்கில் தகவல் தொழில்நுட்பச் சேவைகள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் வளர்ந்த சூழலை எடுத்துக் கூறி, அவற்றுள் சிலவற்றை விளக்கி, இந்தியாவில் அவற்றின் வளர்ச்சியையும், எதிர்காலத்தில் அவற்றின் வளர்ச்சி பற்றிய முன்கணிப்புகளையும் விளக்கிக் கூறுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:
•உலகப் பொருளாதார வளர்ச்சிப் போக்கில் ஐடீஎஸ்-ஐடீஇஎஸ்•குறிப்பிடத்தக்க ஐடீஎஸ், ஐடீஇஎஸ் சேவைகள் சில•வணிகச் செயல் அயலாக்கத்தில் பின்புல வணிகச் செயல்பாடுகள், அறிவுச் செயல் அயலாக்கம், அழைப்புதவி மையங்கள்•மருத்துவ ஆவணமாக்கம்•இந்தியாவில் ஐடீஇஎஸ் துறை வளர்ச்சியும் அரசின் ஆதரவும்•இந்தியாவின் ஐடீஇஎஸ் துறை வாய்ப்புகளும் சவால்களும்•எதிர்காலத்தில் ஐடீஇஎஸ் பற்றிய ஆய்வுகளும் முன்கணிப்புகளும்•உலகப் பொருளாதாரத் தேக்கநிலை