தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாய் (Dog)

 • நாய்
  (Dog)

  முனைவர் ச.பரிமளா
  பேராசிரியர் மற்றும் தலைவர்
  தொல்லறிவியல் துறை
  நாய்

  வீட்டைப் பாதுகாக்க, வேட்டையாட, சறுக்கு வண்டியை இழுக்க, காவல் துறையின் பயன்பாட்டிற்கு என காலம் காலமாக மனிதனுக்குரிய வளர்ப்புப் பிராணியாக நாய் வளர்க்கப்பட்டுள்ளது. குட்டியிலிருந்து வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் மிகமிக நம்பிக்கைக்குரியவையாகவும் நன்றிக்குரியவையாகவும் விளங்குகின்றன. தம்மை வளர்த்தவருக்காக நாய்கள் எதனோடும் யாரோடும் அஞ்சாது போரிடும் குணம் கொண்டவை. ஏறத்தாழ 3 ½ கோடி ஆண்டுகளுக்கு முன் மரங்களில் வாழ்ந்து வந்த சைனோடிக்டிஸ் (Cynodictis) எனும் ஊனுண்ணி விலங்குகளிலிருந்து நாய்கள் தோன்றின. நூற்றுக்கும் மேற்பட்ட நாய் வகைகள் தற்போது கேனிடே (Canidae) குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இக்குடும்பத்தில் வீட்டு நாய்களோடு, காட்டு நாய்கள், ஓநாய்கள், நரிகள், குள்ளநரிகள் ஆகியவையும் அடங்குகின்றன.

  நீண்ட தொலைவிற்கு விரைந்து ஓடும் ஆற்றல் கொண்ட நாய்கள், தம் இரைகளை விரட்டி, வேட்டையாடும் திறன் பெற்றவை. இவற்றின் வெட்டும் பற்களும், கடைவாய்ப் பற்களும், நீண்ட நாக்கும் இவற்றின் உணவுப் பழக்கத்திற்குத் துணை செய்கின்றன. மோப்பத்திறன் மிகுந்த நாய்கள் பல வழிகளில் மனிதர்க்குத் துணை புரிகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-10-2017 17:20:21(இந்திய நேரம்)