தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நண்டு (Crab)

 • வஞ்சிரம் மீன்
  (Seer Fish)

  முனைவர் ச.பரிமளா
  பேராசிரியர் மற்றும் தலைவர்
  தொல்லறிவியல் துறை
  வஞ்சிரம் மீன்

  கடலில் கிடைக்கும் மீன்களுள் மிகுந்த சுவையுள்ள, அதிக விலையுள்ள மீன்களாகக் கருதப்படும் வஞ்சிரம் மீன்கள், வஞ்சூரன், சீலா, மாவுலாசி, அறக்குளா என்ற பெயர்களிலும் அழைக்கப்பெறுகின்றன. ஏறத்தாழ 2 மீட்டர் நீளத்திற்கும் மேல் வளரக்கூடிய இம்மீன்கள், ஒரு குறிப்பிட்டப் பருவத்தில் மிகுந்த சுவை மிக்கவையாக உள்ளன. அதாவது 43 செ.மீ முதல் 75 செ.மீ நீளம் வரை மிகுந்த சுவையுள்ளவையாகவும், அதன் பின்னர் தசைப் பகுதிகள் இறுகிக் கடினமாகி விடுவதால் சுவை குறைந்தும் காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

  சிறிய, பெரிய மீன்களையும், இறால்களையும் கணவாய் மீன்களையும் வேட்டையாடி உண்பதற்கேற்றவாறு இம்மீன்கள், வலிமையான நீள் சதுர வடிவ உடலையும், அகன்ற வாயையும் கூரிய பற்களையும் பெற்றுள்ளன. கடல் நீர் மட்டத்தில் அதிக விரைவுடனும், மிகுந்த சுறுசுறுப்புடனும், பெருங்குழுக்களாகவும் சிறுகுழுக்களாகவும் நீந்தும் தன்மை உடையவை ஆதலால் தூண்டிகளில் இவை எளிதில் சிக்கிக் கொள்கின்றன. எனவே, இவை, பொழுதுபோக்கிற்காகத் தூண்டிலில் மீன் பிடிப்போர்க்கு ஏற்றதொரு மீனாக விளங்குகிறது

  இம்மீன்கள் பெர்சிபார்மஸ் (Perciformes) வரிசையில், ஸ்கோம்பிரிடே (Scombridae) குடும்பத்தில் 18 பேரினங்களின் கீழ் 48 இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:25:58(இந்திய நேரம்)