| 52. பாலை நிலங் 
 கடந்தது
 
 | 
 
 | இதன்கண்: உதயணன் 
 செல்லும் வழியில் எதிர்ப்பட்ட பாலை நிலத்தின் தன்மையும், அதன்கண் அமைந்த 
 கொற்றவை கோயி லியல்பும்; பாலை வழியிலுள்ள பொருள்களும், மரங்களும், பறவை விலங்கு 
 முதலியவைகளும், பிடியினின்று கோடவதி வீழ்தலும், பிடியானை மெலிதலும் பிறவுங் 
 கூறப்படும். 
 | 
 
 |  | 
 
 |  | கார்நீர் நருமதைத் கரையகங் 
 கடந்தபின் வார்நீர் துடைத்து வயந்தக 
 னேறி
 வானக நாண்மீன் றான 
 நோக்கி
 ஆற்றின தளவு மாரிரு ளெல்லையும்
 5     ஏற்றமை யிரும்பிடி யியக்கமு 
 மெண்ணி
 அரும்பிடி நம்மை யாற்றறுத் தன்றாற்
 | உரை | 
 
 |  | 
 
 |  |             
 அரநுதி யன்ன பரன்முரம் 
 படுக்கத்துச்சுரமுத லடைந்த சூழகன் 
 புரிசைப்
 பாழ்நில 
 வாழ்நர் பரவினர் 
 தூஉம்
 செந்தடிக் குருதிப் பைந்நிணக் 
 கொழுங்குடர்
 10    
  எண்டிசை மருங்கினுங் கொண்டவ 
 ரெடுத்த
 வேர்முத 
 லூசல் வேம்பின் 
 சினைதொறும்
 கண்பா டவிந்த கருமணிப் 
 பிறங்கலொ
 டுழைக்கோ டணிந்து பீலி 
 நாற்றிக்
 கழைக்கோற் றொடுத்த கதலிகை நுடங்கச்
 | உரை | 
 
 |  | 
 
 |  |       15    செறிதோற் பரமு 
 மெறிகோல் வாளும்அப்புப் புதையு மணிவரிச் 
 சிலையும்
 செப்புறச் 
 செய்த செல்வ 
 முன்றிற்
 ருருருருருருருறிகழ்மதி 
 முகத்தி
 எண்வகைப் பொலிந்த வொண்படைத் 
 தடக்கைக்
 20    
  கச்சார் வனமுலைக் கண்மணிக 
 கொடும்பூட்
 பச்சைப் பாற்கிளி பவழச் 
 செவ்வாய்
 முத்தேர் முறுவன் முயங்குகயற் 
 றடங்கட்
 சிலையேர் புருவச் செங்கட் 
 செல்வி
 கலைகா முறுவி நிலைகா முற்ற
 25     கற்சிறைக் கோட்டத்து நற்சிறை யொடுங்கி
 | உரை | 
 
 |  | 
 
 |  |             வில்லே 
 ருழவர் செல்சாத் 
 தெறிந்துழிநல்லாப் படுத்த நடுக 
 லுழலையும்
 ஆளிடு படுக்கையு மரில்பிணங் 
 கடுக்கமும்
 தாளிடு 
 குழியுந் தலைகரந் தியாத்த
 30   
  புல்லும் பொள்ளலும் வெள்ளிடைக் 
 களரும்
 நீரில் யாறு நிரம்பா 
 நிலனும்
 ஊரில் காடு மூழடி 
 முட்டமும்
 வறுஞ்சுனைப் பரவையுங் குறும்பாற் 
 குன்றமும்
 இயற்கையி னமைந்தவுஞ் செயற்கையிற் 
 சிறந்தவும்
 35    ஒன்றுகண் டவைபோற் சென்றுலப் 
 பரிதாய்த்
 தட்பக் 
 காலத்தும் வெப்ப மானா
 | உரை | 
 
 |  | 
 
 |  |             தோமையு முழிஞ்சிலு முலவையு முகாயும்கடுவுந் 
	தான்றியுங் கொடுமுட் டொடரியும்
 அரவு மரசு மாரு மாத்தியும்
 40     இரவு மிண்டுங் குரவுங் கோங்கும்
 கள்ளியுங் 
	கடம்பு முள்ளியு முருக்கும்
 தணக்கும் பலாசுங் கணைக்கான் ஞெமையும்
 ஈங்கையு மிலவுந் தேங்காய் நெல்லியும்
 வாகையும் 
	பிறவும் வன்மர மொடுங்கித்
 45    தோகையுங் குயிலுந் 
	துன்னல் செல்லா
 | உரை | 
 
 |  | 
 
 |  |             நுண்பொறிப் 
 புறவின் செங்காற் 
 சேவல்வெண்சிறைப் 
 பெடையோடு விளையாட்டு 
 விரும்பி
 வன்பா 
 லார்ந்த வயிற்ற 
 வாகிக்
 கண்பொரி 
 கள்ளிக் கவர்சினை யேறிக்
 50    கூப்பிடு குரலிசை சேட்புலத் திசைப்பவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கானப் 
 பன்றித் தோன்முலைப் 
 பிணவல் குரங்குநடைக் 
 களிற்றொடு திரங்குமாற் 
 சுவைத்து
 நீர்நசைக் 
 கெள்கித் தேர்மருங் 
 கோடவும்
 உள்ளழ 
 லறாஅ தொள்ளழ லன்ன
 55    செம்முக மந்தி கைம்மகத் 
 தழீஇப்
 பைங்குழைப் 
 பிரச மங்கையி 
 னக்க
 நோதுமற் 
 கடுவ னதுகண் 
 டாற்றாது
 காஞ்சிரங் 
 கவர்கோற் கவின்பெறத் 
 தொடுத்த
 தண்டே 
 னூட்டித் தாகந் தணிப்பவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 60    வெங்கற் 
 சாரல் வேய்விண் 
 டுதிர்த்த அங்கதிர் 
 முத்த மணிமழைத் 
 துளியெனக்
 காட்டுக் 
 கோழிச் சூட்டுத்தலைச் 
 சேவல்
 குத்த 
 லானாது தத்துற்றுத் 
 தளரவும்
 கயந்தலை 
 தழீஇய கறையடி யிரும்பிடி
 65    நயந்தலை நீங்கிய நாரின் 
 முருங்கை
 வெண்பூங் 
 கவள முனைஇ 
 நெல்லிப்
 பைங்கா 
 யமிழ்தம் பல்வயி 
 னடக்கி
 யாறுசெல் 
 வம்பலர் சேறுகிளைத் 
 திட்ட
 உவலைக் 
 கேணி யவலடுத் துலாவவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  |       70     செந்தளி 
 ரிருப்பைப் பைந்துணர் 
 வான்பூத்தீஞ்சுவை 
 நசைஇய தூங்குசிறை 
 வாவல்
 கல்லெனத் துவன்றிப் பல்வயிற் 
 பறப்பவும்
 இன்னவை பிறவும் வெம்மையின் வருந்தி
 நடப்பவும் பறப்பவு மிடுக்க ணெய்தி
 75     வேட்டச் செந்நாய் வேண்டா 
 தொழித்த
 காட்டுமா வல்சியர் கரந்தை 
 பாழ்பட
 வெட்சி மிலைச்சிய வில்லுறு 
 வாழ்க்கைச்
 சிறுபுல் லாளர் சீறூர்க் 
 கியங்கும்
 கற்குவி புல்லதர் பற்பல பயின்று
 80     பாலை தழீஇய பயனறு பெருவழி
 | உரை | 
 
 |  | 
 
 |  | நீடிரு 
 ளல்லது நீந்துத 
 லரிதென எதிர்மலர்ப் பைந்தா ரேயர் 
 பெருமகன்
 அதிர்கயம் விட்ட காலை 
 யவ்வழி
 ஆய்ந்த கோலத் தமரரும் விழையும்
 85    தீந்தொடைப் பேரியாழ் திவவொடு 
 கொளீஇ
 யாப்புறு புரிஞாண் வீக்குமுத 
 லவிழ
 ஓர்ப்பில் காலை யுதயண 
 குமரனை
 நீப்பிட மிதுவென நினைப்பது 
 போலப்
 பஞ்சுரம் பழுனிய பண்முறை நிற்ப
 90    வெஞ்சுரக் கான்யாற்று வேயொடு 
 பிணங்கிக்
 கொய்தகை பொதும்பர்க் கையகன் றொழிய
 | உரை | 
 
 |  | 
 
 |  | வலிகெழு வயந்தகன் வத்தவ 
 நின்யாழ் நிலமிசை வீழ்ந்தது நிற்கநின் 
 பிடியென
 நலமிகு புகழோய் நாலிரு நூற்றுவிற்
 95    சென்றது கடிதினிச் செய்திற 
 னிதன்மாட்
 டொன்று மில்லை யுறுதி 
 வேண்டின்
 தந்த தெய்வந் தானே 
 தருமெனப்
 பின்னிலை வலித்து முன்னிலை 
 கூறிய
 இன்னாப் 
 போகுதற் காகும் பொழுதெனத்
 100     துன்னார்க் கடந்தோன் றோன்றக் 
 கூறிப்
 பறந்துசெல் வதுபோற் சிறந்தவன் கடாவலின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | மன்பெருஞ் சிறப்பின் மாத்தா 
 ளிரும்பிடி எண்பதி னெல்லை யோடிக் 
 கண்சுழன்
 றுதிரப் புள்ளி யூழுழ் வீழ்தரப்
 105     பொதியவிழ் முட்டையிற் புறப்படத் 
 தோன்றி
 இறுதி யிடும்பை யெய்துபு 
 மறுகித்
 தாழ்ந்த கையிற் றாகித் 
 தலைபணிந்
 தாழ்ந்து செலவின் றாட்டந் தோன்ற
 | உரை | 
 
 |  | 
 
 |  | இன்னுயி ரின்னே விடுமிதற் கின்றென 110     மன்னுயிர் காவலன் மனத்தி 
 னெண்ணி
 யானை வித்தக னாதலி 
 னழனிலத்
 தேனை நின்ற விருபதி 
 னெல்லையும்
 எய்துவ னென்னுஞ் சிந்தையன் 
 வெய்துற்
 றேரலர் தாரோ னாற்றலி னூர்தரக்
 115     கோலக் குமரன் குறிப்புவரை 
 நில்லாது
 காலக் கரணத்துக் கடும்பிணி 
 கனற்ற
 ஊன்றதர்ந் திழிந்த வுதிர 
 வெம்புனல்
 தான்புறப் 
 பட்டுத் தாங்குதற் கரிதாய்
 | உரை | 
 
 |  | 
 
 |  |             வாயிற் 
 கூறி யாங்கு மற்றுத்தன்120    
  நோயின் கடுமை நூக்குபு 
 நலிய
 என்னுயிர் 
 விடுவ லிழிந்தனை 
 யாகி
 நின்னுயிர்க் 
 கேம மறிந்தனை 
 நீங்கென
 வடுத்தீர் பெரும்புகழ் வத்தவ 
 ரிறைவனை
 விடுப்பது 
 போல நடுக்க 
 மெய்திய
 125     
 மெய்யிற் கூறிக் கைவரை 
 நில்லாது
 வெந்நோய் 
 முடுக வேற்றவ 
 னாடிறந்
 தைந்நூற் றெல்லையு ளசைந்ததாற் பிடியென்.
 
 | உரை | 
 
 |  |