தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மரபுத் தொடர்

  • பாடம் - 4
     
    A02144 மரபுத் தொடர்
    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    மரபுத் தொடர் என்றால் என்ன என்பதை இப்பாடம் விளக்குகிறது. அறிஞர்கள் தொன்று தொட்டு ஒரு சொல்லை அல்லது பொருளைத் தொடரில் எவ்வாறு பயன்படுத்தினார்களோ அவ்வாறு பயன்படுத்துவது ஏன் என்பதை விளக்குவதாக இப்பகுதி அமைகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இதனைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும், பயன்களையும் பெறுவீர்கள்.

    •  

    உண்பது தொடர்பான வினைச் சொற்கள், எழுத்து மாறாச் சொற்கள், இரக்கும் சொற்கள் ஆகிய சொற்களைத் தொடர்களில் பயன்படுத்தும் மரபை அறியலாம்.

    •  

    பல பொருள் குறித்த ஒரு சொல்லைத் தொடரில் பயன்படுத்தும் மரபை அறியலாம்.

    •  

    ஒரு பொருள் குறித்துவரும் இயற்பெயர், சிறப்புப் பெயர் ஆகியவற்றையும் ஒரு பொருள் பல பெயரையும், மூவகைப் பெயரையும் தொடர்களில் பயன்படுத்தும் மரபையும் அறியலாம்.

    •  

    இரட்டைக் கிளவி, அடைமொழி ஆகியவற்றைத் தொடர்களில் பயன்படுத்தும் மரபை அறியலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:07:48(இந்திய நேரம்)