தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இரக்கும் சொற்கள்

 • 4.8 இரக்கும் சொற்கள்
   

  ஈ, தா, கொடு என்னும் சொற்கள் ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து பெறக் கேட்பதாக அமைந்த சொற்களாகும்.

  என்பது, தாழ்ந்த நிலையில் உள்ளவர், தன்னிலும் உயர்ந்த நிலையில் உள்ளவரிடம் ஒரு பொருளைப் பெறப் பயன்படுத்தும் சொல்லாகும்.

  (எ-டு)   அப்பா, எனக்கு இப்பொருளை ஈவாயாக.

  தா என்பது, தனக்கு ஒத்தவரிடம் ஒருவர் ஒரு பொருளைப் பெறப் பயன்படுத்தும் சொல்லாகும்.

  (எ-டு)    நண்பா உன் புத்தகத்தைத் தா.

  கொடு என்பது, உயர்ந்த நிலையில் உள்ள ஒருவர், தன்னிலும் தாழ்ந்த ஒருவரிடம் ஒரு பொருளைப் பெறப் பயன்படுத்தும் சொல்லாகும்.

  (எ-டு)    மகனே, எனக்குத் தண்ணீர் கொடு.

  இவ்வாறு தகுதி அறிந்து ஈ, தா, கொடு என்னும் சொற்களைப் பயன்படுத்துவது மரபு.

  ஈதா கொடுஎனும் மூன்றும் முறையே
  இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்புரை

  (நன்னூல் - 407)

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:12:43(இந்திய நேரம்)