Primary tabs
- 3.5 தொகுப்புரை
இதுகாறும் சொல்லப்பட்டவற்றைத் தொகுத்துக் காண்போம். தமிழகம் முதன் முதல் அயலவர்க்கு அடிமைப்பட்ட இருண்ட காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. இக்காலம் கி.பி. 300 முதல் கி.பி. 600 வரையில் அமைந்தது.
கீழ்க்கணக்கு என்பதன் பொருளாவது குறைந்த அடிகளைக் கொண்ட செய்யுட்களைக் கொண்டு அமைந்தது என்பதாகும். பாட்டியல் நூல்கள் இதற்கு இலக்கணம் கூறுகின்றன.
இத்தொகுதியில் உள்ளவற்றை 1) நீதி உரைப்பன 2) காதலைப்பாடுவன 3) போரைச் சிறப்பிப்பது என மூன்று பிரிவில் அடக்கலாம்.
நீதிநூல்களே மிகுதியாகையால், இக் காலத்தை நீதி நூல்களின் காலம் எனலாம்.
அகவலும், கலியும், பரிபாடலும் செல்வாக்குப் பெற்றது சங்க காலம். வெண்பா செல்வாக்குப் பெற்ற காலம் இருண்ட காலம். இத்தொகுப்பிலுள்ள பலவும் ‘அம்மை’ என்னும் நூல் வனப்பைச் சார்ந்தவை.
இதிலுள்ள நூல்களில் வடசொற்களும், பிற்கால இலக்கணக் கூறுகளும் காணப்படுகின்றன. பழைய இலக்கியத்தின் கருத்தும், சொல்லும், தொடர்களும் புலவர்களால் எடுத்தாளப்படுகின்றன.
1.கணிமேதாவியார் என்பவர் இயற்றிய இரு நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
2.திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்ற மருந்துகளில் அடங்கிய மூலப் பொருள்களைக் குறிப்பிடுக.
3.வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகக் கருதப்படும் நீதி நூல் எது?
4.கீழ்க்கணக்கு நூல்களின் அகநூல்கள் எவை?5.மருந்துப்பெயர் கொண்ட நீதி நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.