Primary tabs
-
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
தமிழகத்தில் நாட்டுப்புற மக்களால் தொன்று தொட்டு மரபுக் கலைகளாய் நிகழ்த்தப் பட்டுவரும் நாட்டுப்புற நிகழ்த்து கலைகளை அறிமுகம் செய்கிறது.
நாட்டுப்புற நிகழ்த்து கலைகளை வகைப்படுத்தி அவை எந்தெந்தச் சூழலில் எவ்வாறெல்லாம் நிகழ்த்தப்பட்டு வருகின்றன என்பதை விளக்குகிறது.
கலைகளை நிகழ்த்துவோர், இடம்பெறும் கதைகள், இசைக் கருவிகள், உடை ஒப்பனை முறைகள் போன்றவையும் எடுத்துரைக்கப் படுகின்றன.
நாட்டுப்புற நிகழ்த்து கலைகளின் வழித் தமிழர் பண்பாடு வெளிப்படும் விதம் குறித்தும் சொல்லப்படுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
தமிழக மக்களால் மரபு வழியாக நிகழ்த்தப் பட்டு வரும்
நாட்டுப்புற
நிகழ்த்து கலைகளை அறிந்து கொள்ளலாம்.
நாட்டுப்புற நிகழ்த்து கலைகளின் அமைப்பு, நிகழ்த்தப்படும் முறை,
நிகழ்த்தப்படும்
சூழல் இவற்றை விளங்கிக் கொள்ளலாம்.
வழிபாடுகளுக்கும், நிகழ்த்து கலைகளுக்கும் இடையிலான
உறவைப்
புரிந்து கொள்ளலாம்.
கலைகளில் ஆர்வமுள்ளோர் தமிழக நாட்டுப்புற நிகழ்த்து
கலைகளில்
பயிற்சி பெற்று, தங்கள் பகுதிகளில் நிகழ்த்தித்
தங்களின்
கலைத் திறனை வெளிக் காட்டலாம்.
தமிழர்களின் நாட்டுப்புற நிகழ்த்து கலைகளின் வழித் தமிழர்களின்
தொன்மையான
கலை மரபை உணர்ந்து கொள்ளலாம்.

