தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

  • பாடம் - 6

    A06146 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

    E


    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    தமிழக நாட்டுப்புறக் கைவினைக் கலைகளை அறிமுகம் செய்கிறது. கைவினைக் கலைகளின் வகைப்பாடுகளை விளக்கிக் கூறுகிறது. மண், மரம், ஓலை, காகிதம் சார்ந்த கைவினைக் கலைகள் பற்றியும் அவற்றின் சிறப்புகள் குறித்தும் எடுத்துரைக்கிறது. பிற கைவினைக் கலைகளான கொம்பு, பச்சை குத்துதல், கோலமிடுதல் போன்ற கலைகளையும் விளக்குகிறது. தஞ்சை வளர்க்கும் கைவினைக் கலைகளைச் சிறப்பாகச் சுட்டிக் காட்டுகிறது. நாட்டுப்புறக் கைவினைக் கலைகளின் தனித்துவம், தமிழ்ப் பண்பாட்டோடு அவை கொண்டுள்ள உறவு, கலைகளின் இன்றைய நிலை ஆகியவை குறித்தும் விளக்கிக் கூறுகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    நாட்டுப்புறக் கைவினைக் கலைகள், கலைப் பொருட்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    கைவினைக் கலைகளின் வகைப்பாடுகளையும் அவற்றின் தனித்துவங்களையும் அறிந்து கொள்ளலாம்.

    கைவினைக் கலைகளில் பாரம்பரியமாக ஈடுபட்டுவரும் கைவினைக் கலைஞர்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

    கைவினைக் கலைகள் நாட்டுப்புறப் பண்பாட்டோடு கொண்டுள்ள உறவைப் புரிந்து கொள்ளலாம்.

    கைவினைக் கலைகளில் பயிற்சி பெற்று உற்பத்தியைத் தொடங்கலாம்; கலை ஆர்வமுள்ளோரையும் அதில் ஈடுபடுத்தலாம்.

    கைவினைக் கலைப் பொருட்களுக்கான விற்பனை அங்காடியைத் தொடங்கிப் பொருளீட்டலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:48:49(இந்திய நேரம்)