தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாட்டுப்புற விளையாட்டுகள்

  • பாடம் - 5

    A06145 நாட்டுப்புற விளையாட்டுகள்

    E


    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    நாட்டுப்புறப் பண்பாட்டு மரபில் மக்களால் காலங்காலமாக நிகழ்த்தப்பட்டு வரும் நாட்டுப்புற விளையாட்டுகளை அறிமுகம் செய்கிறது.

    சிறியோர் ஆடும் விளையாட்டுகள், ஆடவர் ஆடும் விளையாட்டுகள், மகளிர் ஆடும் விளையாட்டுகள் என்று விளையாட்டுகளை வகைப்படுத்தி விளக்குகிறது.

    விளையாட்டுகள் ஆடப் பெறும் முறை, சூழல், விளையாட்டுப் பாடல்கள் போன்றவற்றையும் விளக்கமாகக் கூறுகிறது.

    விளையாட்டுகளினால் மேம்படும் திறனையும் விளையாட்டுகளின் வழி வெளிப்படும் தமிழர் மரபையும் எடுத்துச் சொல்கிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    நாட்டுப்புற மக்களால் தொன்று தொட்டு ஆடப்பட்டு வரும் விளையாட்டுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    எந்தெந்த விளையாட்டுகள் எம்மாதிரியான அமைப்பைக் கொண்டுள்ளன; எம்முறையில் விளையாடப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.

    எந்தெந்த விளையாட்டுகள் யார் யாரால் எந்ததெந்தச் சூழல்களில் ஆடப்படுகின்றன; விளையாட்டில் இடம்பெறும் பாடல்கள் எவை என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.

    விளையாட்டுகளால் விளையும் திறன்களை (Skills)யும், பயன்களையும் புரிந்து கொள்ளலாம்.

    விளையாட்டு முறைகளையும் அதற்கான பாடல்களையும் பயின்று, விளையாடியும், பிறருக்குக் கற்றுத் தந்தும், தங்களின் பொன்னான காலத்தைப் பயனுள்ள வகையில் கழிக்கலாம்; களிக்கலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2019 18:25:27(இந்திய நேரம்)