தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காப்பியம்

  • 3.1 காப்பியம்
     

    E

    ஒரு கருத்தைக் கவிதை வடிவில் தெரிவித்தால் அதைச் செய்யுள் என்கிறோம். செய்யுள் வடிவில் ஒரு தொடர் கருத்தை அல்லது கதையைத் தெரிவித்தால் அதைக் காப்பியம் என்கிறோம். காப்பியங்களை இரண்டு வகையாகப் பிரித்துக் கூறுவார்கள்

    1. பெருங்காப்பியம்
    2. சிறுகாப்பியம்

    3.1.1 பெருங்காப்பியம்
     

    பெருங்காப்பியம் ஒரு தலைவனைக் கொண்டதாய் இருக்கும். அந்தத் தலைவன் நிகர் இல்லாதவனாக இருப்பான். நம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் கொண்டதாய்ப் பெருங்காப்பியம் விளங்கும். மேற்கூறியவற்றில் சில அல்லது பல குறைந்து வருவது சிறுகாப்பியம் ஆகும்.
     

    3.1.2 பாரதிதாசனின் காப்பியங்கள்
     

    பாரதிதாசன் பதினைந்துக்கும் மேற்பட்ட காப்பியங்களைப் படைத்துள்ளார்.

    1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
    2. புரட்சிக் கவி
    3. வீரத்தாய்
    4. போர் மறவன்
    5. ஒன்பது சுவை
    6. கடல் மேல் குமிழிகள்
    7. நல்லமுத்துக் கதை
    8. எதிர்பாராத முத்தம்
    9. பாண்டியன் பரிசு
    10. அமிழ்து எது?
    11. இருண்ட வீடு
    12. காதலா கடமையா
    13. குறிஞ்சித்திட்டு
    14. தமிழச்சியின் கத்தி
    15. கண்ணகி புரட்சிக் காப்பியம்
    16. மணிமேகலை வெண்பா
     

    என்பவை பாரதிதாசன் படைத்துள்ள காப்பியங்கள் ஆகும். இவை அனைத்தும் சிறுகாப்பியம் என்னும் பிரிவில் அடங்கும். இவை அனைத்தையும் இந்தப் பாடத்தில் விளக்குவது இயலாது. எனவே சில காப்பியங்களை மட்டும் காண்போம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:59:48(இந்திய நேரம்)