தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C01145 பாரதிதாசனின் நாடகங்கள்

 • பாடம் - 5
   
  CO1145  பாரதிதாசனின் நாடகங்கள்
   

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
   

  E

  பாரதிதாசன், கவிதைகள் மட்டும் அல்லாமல் உரைநடையில் பல நாடகங்களும் படைத்துள்ளார் என்பதை இந்தப் பாடம் வெளிப்படுத்துகிறது.

  சங்ககால மாந்தர்களின் வாழ்க்கையை நாடக வடிவமாக்கி எளிய முறையில் பாரதிதாசன் புரியவைத்துள்ளார்.

  நாடகங்கள் வாயிலாகவும் பாரதிதாசன் சமுதாயத்திற்குப் பகுத்தறிவுக் கருத்துகளை வழங்கியுள்ளார்.

  நாடகத்தில் சிறிய தொடர்களை அமைத்து, அவற்றின் வாயிலாக நாடகமாந்தரின் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார் போன்ற செய்திகளை இந்தப் பாடம் சொல்கிறது.


  இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
   

  இப்பாடத்தை முறையே கற்போர் கீழ்க்காணும் பயன்களைப் பெறுவர்:

  • பாரதிதாசன், நாடகம் என்னும் இலக்கிய வடிவத்தைப் பயன்படுத்தியிருக்கும் தன்மையை அறிய முடியும்.

  • புராணக் கதையைப் பாரதிதாசன் அறிவுக்குப் பொருந்தும் வகையில் மாற்றி உள்ளமையை உணர முடியும்.

  • பிசிராந்தையார் என்னும் நாடகத்தின் வாயிலாக உண்மை நட்பின் ஆழத்தைப் புரிந்து கொள்ள இயலும். எல்லாவளமும் ஒரு நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டு மக்களிடம் மனவலிமை இல்லை என்றால் அந்த நாடு சிறப்புப் பெறாது எனத் தெளிய முடியும்.

  • நாடக உரையாடலில் சிறு தொடர்களைப் பயன்படுத்துவது விறுவிறுப்பைக் கூட்டும் என்னும் நடையியல் அறிவைப் பெறமுடியும்.

  இவற்றுடன் பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ் இன உணர்வையும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் அவரது நாடகங்கள் வாயிலாக அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:04:46(இந்திய நேரம்)