தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C01143 பாரதிதாசனின் காப்பியங்கள்

 • பாடம் - 3
   
  CO1143  பாரதிதாசனின் காப்பியங்கள்
   

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
   

  E

  செய்யுள் வடிவில் ஒரு தொடர் கருத்தை அல்லது கதையைத் தெரிவிப்பதைக் காப்பியம் என்று இந்தப் பாடம் தெரிவிக்கிறது.

  பாரதிதாசன் தமது காப்பியங்கள் வாயிலாக, சாதி வேறுபாடு அற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு முயன்றுள்ளார்; பகுத்தறிவுக் கருத்துகளையும் குடியாட்சிப் பெருமைகளையும் வெளிப்படுத்தி ள்ளார்; பெண்களை வீரமும் அறிவும் நிரம்பியவர்களாகப் படைத்துள்ளார்.

  மூடநம்பிக்கை ஒழிந்திடவும், தமிழ்மொழியும் தமிழினமும் உயர்வு எய்திடவும் பாரதிதாசனின் காப்பியங்கள் வழிகாட்டுகின்றன என்பதை இந்தப் பாடம் கூறுகிறது.


  இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
   

  இப்பாடம் பாரதிதாசனின் காப்பியங்களுக்கு ஓர் அறிமுகமாக அமைகிறது. இதனை முறையே கற்போர் கீழ்க்காணும் செய்திகளை அறிவர்.

  • காப்பியம் என்பது யாது?

  • பாரதிதாசன் இயற்றிய காப்பியங்கள் யாவை? இக்காப்பியங்களின் வழியாக அவர் அறிவுறுத்தும் செய்திகள் யாவை?

  முதலியவற்றை அறிந்து கொள்ளலாம்.

  இப்பாடத்தைக் கற்போர் பின்வரும் திறன்களையும் பெற இயலும்.

  • பாரதிதாசனின் காப்பியங்கள் சிலவற்றின் கதைச் சுருக்கம் கூறல்.

  • பாரதிதாசனின் காப்பியங்களில் உவமை நயம் பாராட்டல்.

  • குடியரசு பற்றிய பாரதிதாசனின் கருத்தினை விளக்குதல்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:00:33(இந்திய நேரம்)