தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C01146 பாரதிதாசன் வாழ்கிறார்

 • பாடம் - 6
   
  CO1146 பாரதிதாசன் வாழ்கிறார்
   

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
   

  E

  எளிய இனிய சொற்களைச் சேர்த்து அதைக் கவிதையாக்கி அதன் மூலம் புரட்சிக் கருத்துகளை வெளிப்படுத்தியவர் பாரதிதாசன்.

  இந்தியா, குடியரசு நாடாக மலர்வதற்கு முன்பே குடியாட்சியின் சிறப்புகளைப் பாரதிதாசன் பாடியுள்ளார். சமத்துவச் சமுதாயம் உருவாவதற்குப் பாடல்களை ஆயுதமாகப் பயன்படுத்தினார் அவர்.

  பாரதிதாசனின் கவிதைகள் இன்றும் சமுதாயத்தில் உள்ள சீர்கேடுகளைப் போக்குவதற்கும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. பாரதிதாசன் தமது புரட்சிப் படைப்புகளாலும் புதுமைச் சிந்தனைகளாலும் வாழ்கிறார் என்பதை இந்தப் பாடம் எடுத்துக் கூறுகிறது.


  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
   

  இந்தப் பாடத்தை முறையாகக் கற்போர் கீழ்க்காணும் பயன்களைப் பெறுவர்.

  • பாவேந்தர் பாரதிதாசன் தற்காலத்திற்கும் பொருந்தும் வகையில் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பாடியிருப்பதை அறிந்து கொள்வர் .

  • குடும்பத்தில் மருமகளுக்குத் தேவையான பொருட்களை மாமியாரே வாங்கிக் கொண்டு வரும் வகையில் பாரதிதாசன் மருமகள் புதுமை படைத்திருப்பதைத் தெரிந்து கொள்வர்.

  • சமுதாயம் முன்னேற்றம் பெற வேண்டும் என்றால் அனைவரிடமும் பகுத்தறிவுச் சிந்தனை பரவிட வேண்டும் என்னும் கருத்தை அறிந்து கொள்வர்.

  • நாடு, மொழி, இனம் முதலியவற்றைக் கடந்து உலக மனிதர்களுக்குப் பாரதிதாசன் பாடியிருக்கும் கருத்துகளை அறிந்து கொள்வர்.

  • இயற்கைப் பொருட்களைப் பற்றிப் பாரதிதாசன் பாடி அவற்றை நம் நெஞ்சில் நிலைக்க வைத்திருப்பதை அறிய முடியும்.

  • சமத்துவச் சமுதாயம் மலர்வதற்குப் பாடியுள்ள பாரதிதாசன் அக்கருத்துகளால் நம்மிடையே நிலைத்து வாழ்வதை அறிய இயலும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:06:53(இந்திய நேரம்)