Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் : II
6. காளியின் தோற்றப் பொலிவை விளக்குக.
காளிதேவி தனக்கு உரிய கோயிலில் வீற்றிருந்து தன்னைப் பணிவார்க்கு அருள் வழங்குவாள். காளிதேவியின் சிறப்புகள் பலவற்றையும் தேவியைப் பாடியது எனும் பகுதி விளக்குகிறது.
தேவர்கள் பாற்கடலைக் கடையப் பயன்பட்டது வாசுகி என்னும் பாம்பு. உலகத்தைச் சுமந்து கொண்டு இருப்பது ஆதிசேடன் எனும் பாம்பு. இந்த இரண்டு பாம்புகளையும் கயிறாகக் கொண்டு பெரிய முத்துகள் உள்ளே இடப்பட்ட சிலம்புகளைக் காளி அணிந்திருக்கிறாள்.
காளி தேவி இரண்டு காதுகளிலும் பெரிய மலைகளைக் காதணியாக அணிந்தாள். அவை காதோலைகள் ஆகும். அவற்றையே வரிசையாகக் கோத்து மாலையாக அணிய விரும்பினால் அவை மணிமாலை ஆகும். அம்மாலைகளே காளி தேவியின் கைகளின் மேல் இருக்கும் போது அம்மானை, பந்து முதலிய விளையாட்டுக் கருவிகள் ஆகும்.