தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அந்தாதி இலக்கியம்

  • பாடம் - 6

    c01246 அந்தாதி இலக்கியம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


    அந்தாதியின் பொருள் வகைப்பாடுகளை விளக்குகிறது, அபிராமி அந்தாதியைச் சிறப்பு நிலையில் விவரிக்கிறது.

    அபிராம பட்டரின் சிறப்பைச் சொல்கிறது, அவருடைய பக்தியை உணர்ந்து இரண்டாம் சரபோசி மன்னர் அவருக்களித்த சிறப்பினையும் இந்தப்பாடம் குறிப்பிடுகிறது. அபிராம பட்டரின் இறையுணர்வைக் காட்டுகிறது, அன்னை அபிராமி அவரிடம் பெருங்கருணை கொண்டதையும், அவருக்காக நிகழ்த்திய அற்புதத்தையும் விளக்குகிறது. அன்னை அபிராமியின் அருள் செயல்கள், திருவுருவச் சிறப்பு போன்றவற்றைக் குறிப்பிடுகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம் ?

    • அந்தாதி என்றால் என்ன என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.

    • அந்தாதியின் தோற்றம், வகைகள் முதலிய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    • சிறப்பு நிலையில் அபிராமி அந்தாதியை அறிந்து கொள்ளலாம்.

    • அபிராம பட்டர் வரலாற்றையும் அபிராமி அந்தாதி உருவான வரலாற்றையும் அறிய முடியும்.

    • அன்னை அபிராமியின் அருள் செயல்கள் பற்றித் தெரிந்து கொள்ள இயலும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 07-08-2017 12:21:45(இந்திய நேரம்)