தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சதக இலக்கியம்

  • பாடம் - 5

    c01245 சதக இலக்கியம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


    சதகம் என்ற சொல்லின் விளக்கம் பற்றி கூறுகிறது. சதகம் என்றால் நூறு என்று பொருள்படும். சதக இலக்கியத்தின் இலக்கணம், வகைகள், அவற்றின் நோக்கம் ஆகியவை பற்றிக் குறிப்பிடுகிறது. படிக்காசுப் புலவர் பாடிய தண்டலையார் சதகம் பற்றி விரிவாகப் பேசுகிறது.

    சதகத்தின் பாடுபொருள்களைக் கருத்து அடிப்படையில் சுட்டிக் காட்டுகிறது.

    கற்பின் மேன்மை, புதல்வர் பெருமை, விருந்தோம்பல் ஆகிய இல்லற நெறிகளைக் காட்டுகிறது. இனிமை, பொறுமை ஆகிய உயர்ந்த பண்புகளும், பொய்மை, வஞ்சனையாகிய சிறுமைப் பண்புகளும் விளக்கப்படுகின்றன.

    உலக நீதியையும் அரச நீதியையும் உணர்த்துகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • சதக இலக்கியம் என்றால் என்ன என்பது பற்றிய செய்திகளைத் தொகுத்துக் கொள்ளலாம்.

    • சதக இலக்கியத்தின் இலக்கணம், நோக்கங்கள் முதலிய செய்திகளை அடையாளங் காணலாம்.

    • தண்டலையார் சதகம் எனும் நூல் பற்றிச் சிறப்பு நிலையில் செய்திகளை இனங் காணலாம்.

    • தண்டலையார் சதகத்தின் ஆசிரியர் வரலாறு, சதக அறிமுகம் முதலிய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    • தண்டலையார் சதகத்தின் மூலம் இல்லற நெறி, உயர்ந்த பண்புகள், தீய பண்புகள், அரசியல் நெறி, பெண்களின் இயல்பு ஆகியவற்றைத் தொகுத்துக் கொள்ளலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-08-2017 11:56:13(இந்திய நேரம்)