தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் : II

    7. மறவர்கள் காளிக்குத் தங்களைப் பலியிட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியை விவரிக்க.

    காளி தேவியின் கோயில் முன்பு மறவர்கள் திரண்டு நிற்கின்றார்கள். ‘தேவியே நாங்கள் விரும்பும் வரத்தைத் தருவாயாக! அவ்வாறு தந்தால் எங்கள் உடல் உறுப்புகளைப் பலியாக உனக்குத் தருகிறோம்’ என்று வீர முழக்கம் செய்கிறார்கள். வரம் வேண்டிய பின்பு வேள்வித் தீ வளர்க்கிறார்கள். தங்களின் விலா எலும்புகளைப் பிடுங்கி வேள்வித் தீயில் விறகாக இடுகிறார்கள். உடலிலிருந்து வழியும் இரத்தத்தை நெய்யாகச் சொரிகின்றார்கள். வேள்வி முடிந்தது. மறவர்கள் தம் தலைகளை அறுத்துத் தேவியின் கையில் கொடுக்கின்றார்கள். தலையற்ற உடல்கள் தேவியைக் கும்பிட்டு நிற்கின்றன.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:31:09(இந்திய நேரம்)