தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C01241 பரணி இலக்கியம்

  • பாடம் -1

    C01241 பரணி இலக்கியம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


    தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று பரணி இலக்கியம். தமிழர்களின் புறவாழ்க்கையைப் பாடுபவை புற இலக்கியங்களாகும். பரணி புற இலக்கியத்தைச் சார்ந்ததாகும். ஆயினும் இதிலுள்ள கடைத்திறப்புப் பகுதி காதல் இலக்கிய மரபையும் கொண்டுள்ளது. பரணியின் பெயர்க்காரணம், பரணியின் பொது இலக்கணம், அதன் அமைப்பு, உறுப்புகள் ஆகியன இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன. வீரத்தைப் பாடிப் பரவிய பரணி பின்னர் சமயம் சார்ந்ததாக வளர்ந்ததையும் இது குறிப்பிடுகிறது. இந்தப் பாடத்தில் சிறப்பாகக் கலிங்கத்துப்பரணி பற்றிய அறிமுகமும், ஆசிரியர் செயங்கொண்டாரின் சிறப்பும் பாட்டுடைத் தலைவனாகிய முதற் குலோத்துங்க சோழனின் பெருமையும் விரித்துரைக்கப்படுகின்றன. கலிங்கத்துப்பரணியில் போர் வருணனை, போர்க்கள வீரர்வருணனை, பேய் வருணனை ஆகியவை சுவையாக விளக்கப்படுகின்றன.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்றாகிய பரணி இலக்கியத்தை இனம் காணலாம்.

    • பரணியின் பெயர்க்காரணம், இலக்கணம், அமைப்பு முறை ஆகியன பற்றிய செய்திகளைத் தொகுக்கலாம்.

    • பரணி இலக்கிய வகையின் தோற்றம் முதலியன பற்றிய செய்திகளைப் பகுத்துக் காணலாம்.

    • கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர், பாட்டுடைத் தலைவன், இலக்கியச் சிறப்புகள் ஆகியவை பற்றிய செய்திகளை முறைப்படுத்திக் காணலாம்.

    • பண்டைத் தமிழரின் வீரச் செயல்களைப் பட்டியல் இடலாம்.


புதுப்பிக்கபட்ட நாள் : 18-10-2019 13:05:20(இந்திய நேரம்)