தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 8)

    தொல்காப்பியம் ‘ஐ’காரம் குறித்துத் தெரிவிக்கும் கருத்துகள், மொழியியல் கருத்துகளோடு ஒத்துச் செல்வதை எடுத்துக் காட்டுக.

    தொல்காப்பியம் ‘ஐ’ காரத்தை உயிரொலி என்று வகுத்துப் பன்னிரண்டு உயிர்எழுத்துகளோடு சேர்த்துக் கூறியுள்ளது. எனினும் ஐகாரத்தைத் தொல்காப்பியம் கூட்டொலியாகவே கருதியுள்ளது என்பதையும் காணமுடிகிறது.

    ‘ஐ’காரம் ‘அ’கரம் என்னும் உயிரும் ‘ய’கர மெய்யும் இணைந்து உருவான கூட்டொலி என்பதைத் தொல்காப்பியம் எடுத்துக்காட்டுகிறது.

    ஐயர் என்பதை அய்யர் என்றும் ஐவர் என்பதை அய்வர் என்றும் எழுதும் மரபும் இதனை உறுதி செய்கிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 13:02:20(இந்திய நேரம்)