Primary tabs
3.0 பாட முன்னுரை
இயற்கை என்றும் தன் இயல்புப்படி இருக்கிறது. மனித உணர்வுகள் அவ்வாறில்லை. இவ்விரண்டும் எதிர்ப்படும்போது உணர்வுகள் இயற்கையை வெவ்வேறு தோற்றத்தில் காண்கின்றன என்பதை இப்பாடப் பகுதிப் பாடல்களில் நீங்கள் காணலாம். ஒழுக்கமற்ற தலைவன், தலைவி மற்றும் தோழியின் பார்வையில் ஓர் எருமையாகக் காட்சி தருகிறான். தலைவன் தலைவியை மணக்கக் காலம் நீட்டித்தால் என்ன நேரும்? ஒளவையார் பாடலில் மனத்தை அழுத்துகின்ற ஒரு விடை இருக்கிறது. சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் காதல் மெல்லுணர்வாகவே சித்திரிக்கப்படுகிறது. ஒரே ஒரு விதிவிலக்கு, தலைவி தலைவனை ஏற்க மறுத்தால் ‘மடல் ஏறுவேன்; மலையிலிருந்து பாய்ந்து உயிர் துறப்பேன்’ எனத் தலைவன் மிரட்டுவது. இவைகளை இப் பாடப்பகுதியில் இவற்றின் உணர்வோடும் சுவையோடும் காண்பீர்கள். உள்ளடக்கம், உத்திகள், உருவமைப்பு என்ற முறையில் இவை விளக்கப்பட்டுள்ளன.