தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நற்றிணை-III

  • பாடம் - 3
    D01113 நற்றிணை - 3
    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    நற்றிணை - பாடப்பகுதி மூன்றாவது 10 பாடல்களின் உள்ளடக்கம், உத்திகள், உருவமைப்புகள் விளக்கப்பட்டுள்ளன. இப்பாடப்பகுதியில் உள்ள சில பாடல்களில் அருமையான இயற்கைக் காட்சிப் பதிவுகள் உள்ளன என்பது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

    பாடல்களில் உள்ளுறைப் பொருள் எவ்வாறு அமைந்து வருகிறது என்பது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

    பாடல்களில் பயிலும் சிறந்த உவமைகள், சிறந்த தொடர்கள் காரணமாக அவற்றை இயற்றிய புலவர்க்குப் பெயர் அமைந்துள்ள சிறப்பு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    ‘பூமி நிலைகுலைந்தாலும் காதலர் சொல் தவற மாட்டார்’ எனக் கூறும் தலைவியைக் காணும் உங்களுக்கு ஏற்படும் பெருமிதம் உங்களுக்குக் கிடைக்கும் ஒரு பயன்.
    கவிஞரின் கவித்துவம் ‘விழிக்கண் பேதை’ என வருணிக்கப்படும் மான்குட்டியை உங்கள் கண்முன் நிறுத்துகிறதா இல்லையா? படித்துவிட்டுச் சொல்லுங்கள்!
    ‘மடலேறுதல்’ என்னும் அக இலக்கிய மரபை இப்பாடப்பகுதிப் பாடல் ஒன்றில் புரிந்து கொள்வீர்கள்.
    ‘பகலிலும் கூடப் பகல் இல்லாமல் போய்விட்டது’ என்னும் பொருளில் வரும் வருணனை, ஒரு பாத்திரத்தின் மனவுணர்வுடன் இயற்கை எந்த அளவுக்குப் பிணைந்து கொண்டுள்ளது என்பதை உங்களுக்கு நன்றாக உணர்த்தும்.

    பாட அமைப்பு

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-09-2017 18:15:50(இந்திய நேரம்)