தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நற்றிணை - 1

 • பாடம் - 1
  DO1111 நற்றிணை - 1

  பகுதி- 1

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  நற்றிணை - பாடப்பகுதியில் உள்ள முதல் பத்துப் பாடல்களின் திணை, கூற்று விளக்கங்கள், பாடலை இயற்றிய புலவர் பற்றிய குறிப்புகள், பாடல்களின் பொருள், வெளிப்பாட்டு முறைகள், பாடல்களின் வடிவமைப்பு ஆகியன கூறப்பட்டுள்ளன.

  இப்பாடல்களில் காதலின் உயர்ந்த மனநிலை, ஒருவருக்கொருவர் காட்டும் அன்பின் மென்மை ஆகியவை எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

  உவமைகளின் சிறப்பும், வருணனைகளின் சிறப்பும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

  உள்ளுறைப் பொருள் எவ்வாறு அமைந்துள்ளது என எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  நற்றிணை - பாடப்பகுதி முதல் 10 பாடல்கள் எழுந்த சூழல்களையும், அச்சூழல்களுக்கேற்ப அப்பாடல்களில் அமைந்துள்ள உணர்ச்சிப் போக்குகளையும் நன்கு புரிந்து  கொள்ளலாம்.
  தலைவன், தலைவி முதலிய பாத்திரங்களின் மன நிகழ்வுகள் பாடல்களில் எவ்வாறு நுட்பமாகச் சித்திரிக்கப்படுகின்றன என்பதை உணரலாம்.
  மானிடக் காதல் வாழ்வில் இயற்கை எந்த அளவுக்கு ஊடுருவித் தன் பங்கைச் செலுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
  இப்பாடப்பகுதியில் இடம்பெறும் புலவர்களின் கவித்திறனைக் கண்டு சுவைக்கலாம்.

  பாட அமைப்பு

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:18:46(இந்திய நேரம்)