Primary tabs
1.4 தொகுப்புரை
இப்பாடல்களில் இலட்சியக் காதல் எத்தகையது என்பதையும் காதலர்கள் ஒருவருக்காக ஒருவர் ஏங்கிக் காத்திருக்கும் இருப்பு எத்தகையது என்பதையும் கண்டீர்கள். பேச்சும் செயலும் உணர்வும் வேறுவேறு அல்ல எனத் தோன்றுமாறு கவிஞர்கள் விளைவிக்கும் வியப்பே கவிதை என உணர்ந்தீர்கள். எப்படிச் சொன்னால் உரைநடை கவிதையாகி விடுகிறது என்பதையும் கண்டீர்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
பாலைத்திணைப் பாடலில் செழிப்பு, குளிர்ச்சி ஆகியவற்றைக் காட்டும் பெருங்கடுங்கோவின் நோக்கம் என்ன?
4.
உப்பு வணிகரின் வண்டிச் சக்கர ஓசையில் நாரைகள் திடுக்கிட்டு நிற்கின்றன - இக்காட்சி உணர்த்தும் குறிப்புப் பொருள் யாது?