Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
3.
சூருடை நனந்தலை எனும் பாடலில் வரும் மழை வருணனை கவிதையில் பெறும் இடம் யாது?
இவ்வருணனை ஒரு காட்சியாக உருவாகிறது. இடி, மின்னல், பெருமழை, சுனைகள் நிரம்பித் ததும்புதல், அருவிகள் ஆர்ப்பரித்தல், காட்டாறுகள் ஓடுதல் ஆகிய இவை, பிரிந்திருக்கும் தலைவனின் வருகையால் தலைவியின் உள்ளத்துக்குள் பெருகும் மகிழ்ச்சிப் பெருக்கைக் குறிப்பாக உணர்த்த வருகின்றன. வெறும் புற வருணனை, கவிதையின் உயிராகிய அக வருணனையை உணர்த்த வருகிறது.