தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நற்றிணை - 2

 • பாடம் - 2
  D01112 நற்றிணை - 2
  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  நற்றிணை - பாடப்பகுதி இரண்டாவது 10 பாடல்களின் திணை - கூற்று விளக்கங்கள், ஆசிரியர் பற்றிய குறிப்பு, பாடல் பொருள் விளக்கம் ஆகியவை தரப்பட்டுள்ளன.

  பாடல்களில் இடம்பெறும் திருக்குறள் கருத்து, சிலப்பதிகாரத்துடன் ஒப்புமையுள்ள கருத்து ஆகியவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

  இற்செறிப்பு, வரைவுகடாதல், தலைவி ஆற்றாமை போன்ற துறை அமைந்த பாடல்களில் கவிஞர்கள் காட்டும் உணர்ச்சிப் பெருக்கு சுட்டிக்
  காட்டப்பட்டுள்ளது.

  இப்பாடல்களில் கவிஞர்கள் உருவாக்கியுள்ள காட்சி அமைப்புகளும் படிமக் காட்சிகளும் எடுத்து விளக்கப்பட்டுள்ளன.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்
  அகப்பொருள் மரபில் வெளியே சொல்வதற்கும் மனத்தில் நினைப்பதற்கும் இடையே எவ்வளவு வேறுபாடு உள்ளது என்பதை இப்பாடப்பகுதிப் பாடல்கள் சிலவற்றிலிருந்து உணரலாம்.
  காதல் உணர்வு - அதனால் ஏற்படும் துயரம் மிகுந்துவிடும்போது ‘காமம் மிக்க கழிபடர்கிளவி’ வெளிப்படுகிறது என்பதை ஒரு பாடலில் காணலாம்.
  புன்னையைத் தங்கள் தங்கையாகக் கண்ட தோழியும் தலைவியும் உங்கள் உள்ளத்தில் மெல்லிய உணர்வுகளை எழுப்புவர் என்பது உறுதி.
  காதல் ஒரு ‘துன்பமான இன்பம்’ எனக் காதலர்கள் உணர்வதை, அவர்கள் உணர்வுப் பாங்கோடு உடன் சென்று அனுபவம் கொள்ள முடியும்.

  பாட அமைப்பு

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-09-2017 18:14:53(இந்திய நேரம்)