தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 2.0 பாட முன்னுரை

    காதல் உணர்வின் தீவிரத்தை ஏதோ ஒருவகையில், மிக நெருக்கமானவர்களுக்குப் புலப்படுத்துவதிலும் ஓர் இன்பம் உண்டு போலும்! தலைவியை நோக்கி விரையும் தலைவன் தேர்ப்பாகனிடம் பேசும்போதும், தலைவனிடம் தூது செல்லுமாறு தலைவி நாரையிடம் பேசும்போதும் இத்தகைய உணர்வு ஏற்படுகிறது. ஆயினும் காதல் நிகழ்வு, மிக நெருக்கமானவர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது எனும் எச்சரிக்கைதான் பெரும்பாலோரிடம் இருக்கும். தலைவன் தன்னைச் சந்திப்பதைத் தான் வளர்த்த புன்னைமரம் கூடப் பார்த்துவிடக் கூடாது என்பது ஒரு தலைவியின் குறுகுறுப்பு (உள்காரணம் வேறொன்றாக இருக்கலாம்). மறுப்பு என்பது காதலின் உண்மையைச் சோதிக்க வைக்கப்படும் தேர்வு ஆகக் கூட இருக்கலாமல்லவா? பிரிவு ஆற்றாமல் வருந்தும் தலைவிகளைத் தேற்றுவதற்குத் தோழிகள் எவ்வளவு பாடுபடுகின்றனர்! சரி, எவ்வளவோ இடையூறுகள் தாண்டி, மணந்து வாழும் வாழ்வில் தலைவியின் பொறுப்புணர்ச்சியும் குடும்பப்பாங்கும் எப்படி இருக்கின்றன? - இத்தகைய நிகழ்வுகளையும் உணர்வுகளையும் இப்பாடப்பகுதிப் பாடல்களில் நீங்கள் எதிர்கொள்கிறீர்கள். இப்பாடல்களின் உள்ளடக்கம், உத்திகள், உருவமைப்பு ஆகியவை தனித்தனித் தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2017 11:40:11(இந்திய நேரம்)