Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
1.
பாலைத்திணைப் பாடலில் செழிப்பு, குளிர்ச்சி ஆகியவற்றைக் காட்டும் பெருங்கடுங்கோவின் நோக்கம் என்ன?
உடன்போக்கில் செல்லும் காதலர்கள், யாரும் எதுவும் தடைசெய்ய முடியாத ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலைக்குச் சென்றுவிட்டனர். அளவற்ற மகிழ்ச்சி பெருகுகிறது. அவர்களின் அகச்சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் கவிஞர் புறச்சூழலில் இயற்கையின் செழிப்பையும் குளிர்ச்சியையும் இனிமைகளையும் காட்டுகிறார்.