தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 5.0 பாட முன்னுரை

    தலைவன், தலைவி, தோழி ஆகியோர் இயங்கும் அகப் பாடல்களில் அவர்களுக்கிடையே எவ்வளவோ குறும்பான விளையாடல்கள் நிகழ்கின்றன. ‘அதோ தலைவியின் அண்ணன்மார்’ என்று சொல்லித் தலைவனைத் திடுக்கிடச் செய்யும் தோழி, தலைவியைத் துப்பறியத் தானே காதல் செய்வதுபோலக் கற்பனைக் கதை சொல்லும் மற்றொரு தோழி போன்றோரை இப்பாடத்தில் நீங்கள் சந்திக்கலாம். காதலின் முதிர்வு ஒருவகைப் பித்தம் ஆகவும் தெரியலாம். தலைவியைக் கனாக்கண்டு எழுந்து கனவை நோக்கிப் புலம்பும் தலைவனையோ, ‘இரவு பகலாய்ப் புலம்புகிறாயே, நீ யார் மீது காதல் கொண்டாய்’ என்று கடலைப் பார்த்துக் கேட்கும் தலைவனையோ உலகம் எப்படி மதிப்பிடும்? இப்பாடப்பகுதியில் ஓர் அழகிய இணக்கமான குடும்பக் காட்சியும் இடம் பெறுகிறது. காதலிக்கும்போது தலைவன் எப்படியிருந்தான், திருமணத்திற்குப் பின் எப்படி ஆனான் என்ற வேறுபாட்டைக் கசப்புடன் காட்டும் பாடல்களும் உண்டு. இப்பாடல்களின் உள்ளடக்கமும், உத்திகளும், உருவமைப்பும் பற்றிய விளக்கங்களை இப்பாடத்தில் நீங்கள் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2017 18:48:18(இந்திய நேரம்)