Primary tabs
-
6.6 தொகுப்புரை
அன்பு நிறை மாணவர்களே! சிறுபாணாற்றுப்படை இலக்கிய வளம்மிக்க ஒரு படைப்பு என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். சிறுபாணாற்றுப்படையில் அமைந்துள்ள உவமைகள், வருணனைகள், தமிழரின் பண்பாட்டுச் செய்திகள் முதலானவற்றை நினைவில் நிறுத்துங்கள். சிறுபாணாற்றுப்படையில் நிகழ்ச்சி விவரிப்புகள் ஒரு சிறுகதை போலவும், நாடகம் போலவும் அமைந்துள்ளதைக் கண்டு மகிழுங்கள்.