தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - D04132-பாட முன்னுரை

  • 2.0 பாட முன்னுரை

    சொற்கள் தரும் பொருள் அமைப்பு, அவை வழங்கும் வழக்குப் பற்றி அமைவதாக விளங்குகிறது. இச்சொல்லுக்கு இன்ன பொருள்தான் உரியது என்பதை அறியப் பல்வேறு காரணிகள் பயன்படுகின்றன. சூழ்நிலை முதலான பல்வேறு பண்புகள் சொல்லுக்கேற்ற     பொருளைத்     தருவனவாக     விளங்கும் அமைப்புகளாகும். இவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பல்வேறு கோட்பாடுகள் சொற்பொருளை அறிய உதவுகின்றன. தக்க சான்றுகளுடன் இக்கோட்பாடுகள் பல்வேறு அறிஞர்களால் விளக்கப்பட்டுள்ளன. இத்தகைய கோட்பாடுகளே சொற்பொருளியல் குறித்த ஆய்வுகளுக்கும் தக்க வழிகாட்டிகளாக விளங்கி வருகின்றன. குறிப்பாக அகராதி மற்றும் சொற்பொருள் தொகுதிகளின் அமைப்பில் இத்தகைய கோட்பாடுகள் ஒரு தெளிவை ஏற்படுத்தி நிற்கும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.

    சொற்கள் பொதுவாகச் சூழ்நிலையை ஒட்டிப் பொருளை உணர்த்தும். ஒரு சொல் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் மிகுதியாக வழங்கும்பொழுது அச்சூழ்நிலையோடு அச்சொல் பெரிதும் தொடர்பு கொண்டிருக்கிறது. அதனால் அச்சொல் அச் சூழ்நிலைக்கு உரிய சொல்லாக அமைந்துவிடுகிறது. தன் இயல்பான பொருள் தன்மையை இழந்து அச் சூழ்நிலையோடு தொடர்புடைய பொருளுக்கு முழுதும் உரிமையாகிப் பொருள் மாற்றமடைகிறது. இத்தகைய பொருள் மாற்றத்தை உணரப் பல்வேறு கோட்பாடுகளை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:21:16(இந்திய நேரம்)