Primary tabs
4.2 ஒருசொல் ஒருபொருளின் வளர்ச்சி நிலை
தொல்காப்பியத்தில் ஒருசொல் ஒரு பொருளாக இருந்த பல சொற்கள், காலப்போக்கில் ஒருசொல் பலபொருளாக வளர்ந்த நிலையைப் பல்வேறு சொற்பொருட்களின் மூலமாகப் புரிந்துகொள்ள முடியும்.
எ.கா(அ) மாதர்
1. காதல்2. பெண்3. அழகு4. பொன்(ஆ) மாலை1. அந்திப்பொழுது(க)
2. இரா3. இருள்4. சமயம்5. குற்றம்6. மரகதக்குற்றவகை(ங)
1. இயல்பு2. தொகுத்த பூந்தொடை3. மாதரணிவடம்4. பிரபந்தவகை5. வரிசை6. பாசம்7. விறலி8. பெண்(ச)
1. குணம்2. தொடுக்கப்பட்டது(இ) வம்பு(க)
1. புதுமை2. நிலையின்மை3. பயனிலாமை4. வீண் வார்த்தை5. பழி6. தீம்பு வார்த்தை7. படிறு8. சிற்றொழுக்கம்9. அசப்பியம்10. வஞ்சனை11. சரசச்செயல்12. சண்டை13. வாசனை14. அரைக்கச்சு15. யானைக்கச்சு16. முலைக்கச்சு17. கையுறை18. மேற்போர்வை“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னான”(நன்னூல்:462)
என்ற நன்னூலார் கூற்றுப்படி ஒரு சொல்லுக்கு ஒருபொருள் இருந்த நிலைமாறி, பல்வேறு பொருள்கள் விரிவடைந்துள்ளதை நம்மால் காண முடிகிறது.
4.2.1 ஒருசொல் பலபொருள் உருவாகக் காரணங்கள்
ஒருசொல், ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களை உணர்த்தும் நிலை, பல்வேறு மொழிகளிலும் காணப்படுகிறது. இதைக் குறிப்பதற்கு polysemia என்னும் சொல்லை பிரெல் (Michel Breal) பயன்படுத்தினார். ஒருசொல் எந்தப் பொருளை உணர்த்தி நிற்கிறது என்பதைச் சூழல்தான் முடிவு செய்கிறது.
எ.கா
root எனும் சொல்லை எடுத்துக் கொள்வோம் root - (வினைச்சொல்)
1. to send down roots and begin to grow.
2. to cause to stand fixed and unmoving.
3. to establish something deeply and firmly.
4. to root something out, destroy something completely.root எனும் ஒருசொல், பல்வேறு பொருளை உணர்த்துவதை அறிய முடிகிறது.
தொடக்கத்தில் ஒரு பொருளைக் குறிப்பிட்ட சொல்லானது, காலப்போக்கில் பல்வேறு காரணங்களினால் வெவ்வேறு பொருள்களைப் பெற்றிருக்கலாம். இதற்கு அரசியல், சமூக, பொருளியல், சமயச் சூழ்நிலை காரணமாகலாம்.
எ.கா
கோயில்
அரசர்மனை, தேவாலயம் சிதம்பரம், ஸ்ரீரங்கம்
‘கோயில்’ எனும் சொல் அரசனது அரண்மனையைக் குறிப்பதை, புறநானூறு (67), நெடுநல்வாடை (அடி.100) என்பவற்றில் காணமுடிகிறது. இடைக்காலத்தில், பக்தியிலக்கியங்களில் இறைவனுடைய இருப்பிடமாகக் குறிக்கப்பட்டது. பிற்காலத்தில் குறிப்பாகத் தில்லையையும், திருவரங்கத்தையும் இச்சொல் குறிப்பதாயிற்று.
4.2.2 ஒருசொல் பலபொருளின் வகைகள்
பலபொருள் காட்டும் ஒரு சொல்லைப் பின்வருமாறு பகுக்கலாம்:
1. ஒலியமைப்பில் ஒத்த சொற்கள்
ஆறு
river, six [(1) நதி, (2) எண்] ஆற்றினையும் ஆறு என்ற எண்ணினையும் குறித்தல்
ஓடு
run, tile, ஓடுதல், கூரை வேயும் ஓடு.
2. இரண்டுமே தனிச்சொற்கள்
தட்டு
plate, clap [(1) பெயர்ச்சொல், (2) வினைச்சொல்] உண்ணும் தட்டு, கை தட்டு
3. வேற்றுமொழிச் சொற்களைப் பெறுவதனால்
மைலு
மயில், மைல் அன்னம்
சாதம், பறவை ஏலம்
ஏலக்காய், ஏலம் (விடுதல்) நட்சத்திரம்
வானில் உள்ளது [(விண்மீன்), (திரை நட்சத்திரம்)]
4. ஒரு சொல்லின் முதற்பொருள் நீட்டுப்பொருள் என்பனவற்றின் தொடர்ச்சி நீங்கிவிடும் போது:
அரை
பாதி, இடுப்பு (பாதியாகிய அரை, பொருள் நீட்சியின் போது இடுப்பைக் குறிக்கிறது).
ஒட்டு
ஒட்டு (வினை), ஒட்டு (உறவுப்பெயர்) (ஒட்டு என்ற வினையைக் குறிக்கும் முதற்பொருள் பொருள் நீட்சியின்போது ஒட்டு என்ற உறவுப் பெயரைக் குறிக்கின்றது.)
4. தொடர்பான பலபொருள் குறிக்கும் சொல்:
(i) பொருளுருவாக்கம் : பூ
பூத்தல், மலர்
(ii) பொருள் நீட்டல் : நரி
வஞ்சக விலங்கு, வஞ்சகன்
(iii) பொருள் அடைவு : மொட்டை
முடியற்ற தலை, வழுக்கைத் தலை, மாடி
(iv) சமுதாயச் சூழலுடன் தொடர்புபடுத்தும் போது தண்ணீர் இறை
கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்தல், நிலத்துக்கு நீர் பாய்ச்சுதல் வழுக்கை
வழுக்கைத் தலை, இளநீரில் உள்ள தேங்காய்
5. உருவகம் தொடர்பான பலபொருள்களைக் குறிக்கிறது. இதைப் பின்வருமாறு (ஐந்தாக) உல்மன் வகைப்படுத்துகிறார்.
தமிழ் மொழியில் ஒரு சொல் உருவகத்தின்போது தன் முதற்பொருள் அல்லாது வெவ்வேறு பொருட்களைக் குறிப்பதைக் காண முடிகிறது.
(i) மனிதனுடன் தொடர்புடைய உருவகம்
காது
உடலுறுப்பு, கோப்பையின் பிடி.
(ii) கழுத்து
உடலுறுப்பு, சட்டையில் உள்ள காலர்
(iii) விலங்குடன் தொடர்புடையது
பன்றி - பன்றி
(iv) உருவுள்ளவையோடு தொடர்புடையது
வீடு - இல்லம், மோட்சம்
(v) உணர்வுடன் தொடர்புடையது
இனிப்பு - சுவை, இனிய உணர்வு.
(vi) உருவற்றதனோடு தொடர்புடையது
அடுக்கு - அடுக்கிவை, வீணாகப் பேசு.
6. ஆகுபெயரும் பலபொருள் குறிக்கும் ஒருசொல் ஆகும்
தன்னை மட்டும் குறிக்காமல், தன்னோடு தொடர்புடைய வேறு பொருட்களையும் குறிக்கும் ஆகுபெயரானது, பல பொருள் குறிக்கும் ஒரு சொல்லாகவும் விளங்குகிறது.
பொருளாகுபெயர் - காகிதம் : தாள், கடிதம் இடவாகுபெயர் - காஞ்சிபுரம் : இடம், பட்டுப்புடவை காலவாகுபெயர் - மாசம் : மாதம், குழந்தை பிறப்பதற்குரிய காலம்
சினையாகுபெயர் - படிப்பு : வாசித்தல், கல்வி குணவாகுபெயர் - இழுப்பு : இழுத்தல், காக்காய் வலிப்பு தொழிலாகுபெயர் - பூ : பூத்தல், மலர்
7, இலக்கண வகையைச் சாரும் பொருள்களைக்கொண்டது : ஒரே இலக்கண வகை
ஆள் : மனிதன், வேலையாள் (பெயர்) பார் : பார், சோதித்துப்பார் (வினை)
இரண்டு இலக்கண வகை சார்ந்தவை:
விழி : கண் (பெயர்): கண்விழி (வினை)
8. பின்வருவன பலபொருள்களைச் சுட்டும் தன்மையன:
உருபன் : ஆல் : மண்ணால் செய்த பொம்மை; தடியால் அடித்தேன் சொல் : விழி : கண்விழி (திற) : கண்கள்
சொற்றொடர் - நான் வேலூர்! நான் வேலூரைச் சேர்ந்தவன் நான் வேலூருக்குச் செல்பவன் நான் வேலூரிலிருந்து வருபவன் மரபுத்தொடர் - தொலைந்து போ: இங்கிருந்து போ; இறந்து போ.
9. பரவலான பொருளைக் காட்டும் சொல்:
அவன் சுமையை எடுத்தான் (தூக்கினான்) அவன் நல்ல பழங்களை எடுத்தான் (தெரிவு செய்தான்) அவன் பல்லை எடுத்தான் (பிடுங்கினான்) அவன் குழந்தையை எடுத்தான் (தத்தெடுத்தான்) - நகரத்தார் வழக்கு)
10. வரிசைப் பொருள்களைக் காட்டும் சொல்:
புரட்டு - மாற்று, பேச்சை மாற்று, ஏமாற்று.
இவ்வாறாக ஒருசொல் பல பொருள்களைக் காலப்போக்கில் பெற்று வருவதைக் காண முடிகிறது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I1.தொல்காப்பியர் காலத்தில் ‘மாலை’ என்ற சொல் எந்தப் பொருளில் வந்தது என்பதைச் சான்றுடன் குறிப்பிடுக.