தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 4.5 தொகுப்புரை

    நண்பர்களே! இதுவரை ஒருசொல் பலபொருள் குறித்தும், ஒருபொருள் பலசொல் குறித்தும் பல செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்துகொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பார்க்கலாம்.

    • ஒருசொல் ஒருபொருள், ஒருசொல் பலபொருள், ஒருபொருட் பலசொல் குறித்துப் பழமையான இலக்கண நூல்களான தொல்காப்பியமும், நன்னூலும் கூறும் செய்திகளை அறிந்து கொண்டீர்கள்.
    • ஒரு பொருளுக்குப் பல சொற்கள் உருவாகக் கூடிய பல்வேறு காரணங்களையும் , அதற்குரிய சான்றுகளுடன் புரிந்துகொண்டீர்கள்.
    • ஒருபொருளைக் குறிக்கும் பலசொற்கள் இருப்பினும், அவற்றிடையே உள்ள வேறுபாடுகள் குறித்தும், வகைகள் குறித்தும் தக்க சான்றுகளுடன் உணர்ந்து கொண்டீர்கள்.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    ஒரே பொருளைக் குறிக்கும் இருசொற்களிடையே உள்ள நுண்ணிய வேறுபாட்டிற்குச் சான்று தருக.
    2.
    பிறமொழியிலிருந்து தமிழ்மொழிக்கு வந்து ஒரே பொருளைத் தரும் சொற்களுக்குச் சான்றுகள் தருக.
    3.
    சாதிக்கிளைமொழி ஒருபொருள் பலமொழிக்கு உதாரணமாவதற்குச் சான்று தருக.
    4.
    தமிழில் வழங்கும் எதிரொலிச் சொற்களுக்குச் சான்றுகள் தருக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-11-2017 16:14:24(இந்திய நேரம்)