தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-விடை

  • தன் மதிப்பீடு - I : விடைகள்

    4.

    தொகைநூல்களில் குறுந்தொகையே முதலில் தொகுக்கப்பட்டது என்ற கருத்தை உ.வே.சா. எவ்வாறு நிறுவுகிறார்?

    தொகை நூல்களில் முதலில் தொகுக்கப் பெற்றது குறுந்தொகை என்பதற்கு ஏதுக்கள் கூறினார், காக்கை பாடினியார் நச்செள்ளையார், கயமனார், கள்ளிலாத்திரையனார், ஓரேருழவனார் போன்ற புலவர்களின் இயற்பெயர்கள் மறைய, குறுந்தொகையில் அவர்கள் எழுதிய விழுமிய பாடல்களின் நயமிகு சொற்களாற் பெயர் பெற்றார்.

    “இவ்வாறு குறுந்தொகையிலுள்ள சொற்றொடர் காரணமாகப் பெயர் பெற்ற புலவர்கள், அப்பெயராலேயே பிற நூல்களில் வழங்கப்பெறுவதுபோல அந்நூல்களிலுள்ள செய்யுட்பகுதி காரணமாகப் பெயர் பெற்றாரது பெயர் ஒன்றேனும் குறுந்தொகையில் வரவில்லை”

    “முதலில் ஆசிரியப் பாக்களில் தனியாக உள்ள அகப்பாக்களைத் தொகுத்து அடியளவால் மூன்று பிரிவாக்கிக் குறைந்த அளவுடைய குறுந்தொகையை முதலிற் செப்பஞ்செய்தார்களென்று கொள்வது ஒருவகையில் இயல்புடையதாகவே தோன்றுகிறது”

    ஆகவே குறுந்தொகையே முதலில் தொகுக்கப்பெற்றது எனக் குறிப்பிட்டுள்ளார் 

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2018 18:42:08(இந்திய நேரம்)