தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P1022-கண்ணதாசனின் உரைநடை

 • பாடம் - 5
  P10225 கண்ணதாசனின் உரைநடை
  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  இந்தப் பாடம் கவிஞர் கண்ணதாசனின் வாழ்வையும் படைப்புகளையும் கூறுகிறது. கவிஞரின் கவிதையையும் உரைநடையையும் தெரிவிக்கிறது. கவிஞரின் உரைநடையின் உட்பொருள்களை விளக்குகிறது. கண்ணதாசனின் உரைநடையின் தனித்தன்மைகளை எடுத்துரைக்கின்றது. கண்ணதாசனின் பல்திறப்பாங்கினைக் கூறுகிறது. கண்ணதாசன் தமிழ் உரைநடைக்கு வழங்கிய கொடையை எடுத்துரைக்கிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  1. இந்தப் பாடத்தில் கண்ணதாசனின் வாழ்வையும் படைப்புகளையும் அறியலாம்.
  2. அவரது கவிதையையும் உரைநடையையும் தெரிந்து கொள்ளலாம்.
  3. கவிஞரின் உரைநடையின் உட்பொருள்களை உணர்ந்து கொள்ளலாம்.
  4. அவரது உரைநடையின் தனித்தன்மைகளை உணர்ந்து கொள்ளலாம்.
  5. கவிஞரின் பல்திறப் பாங்கினை அறிந்து கொள்ளலாம்.
  6. தமிழ் உரைநடைக்குக் கண்ணதாசன் வழங்கிய கொடையைத் தெரிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:48:33(இந்திய நேரம்)