Primary tabs
- 3)தமிழின் சிறப்புகளாகப் பாரதிதாசன் கூறுவன யாவை?
பாரதிதாசன் தமிழை அமுதத்தோடும், உயிரோடும் ஒப்பிட்டுக் கூறுகின்றார். தமிழை நிலவென்றும், மணமென்றும், மதுவென்றும் சிறப்பிக்கின்றார். தமிழை இளமைக்கும் புலவர்களின் புலமைக்கும் அசதியைப் போக்கும் தேனுக்கும் ஒப்பிடுகிறார்.மொத்தத்தில் தமிழை மனித உயிரோடு உயிராகக் கலந்த ஒன்று எனப் பாடுகின்றார்.