தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் கவிதைகள்

 • பாடம் - 6

  p10316 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதைகள்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  காலத்தை வென்ற கவிஞர்; முறையாகக் கல்வி பயிலாதவர்; மக்களைப் பாடியவர்; மக்களுக்காக, மக்கள் மொழியில் எழுதியதால் மக்கள் கவிஞர் என அழைக்கப்பட்டவர்; இத்தகைய சிறப்புகளையுடைய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்வும், படைப்பும் பற்றிய தகவல்களைத் தருகிறது இப்பாடம். இத்தகவல்களின் மூலம் ஏழைகளின் நலிவையும், நாட்டுப்புற மக்களின் பழக்க வழக்கங்களையும், கலை மரபுகளையும், மண்ணின் மணத்தையும், விவசாயத் தொழிலின் சிறப்பையும் இப்பாடம் விளக்கிக் காட்டுகிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?
  •  
  ஏழைத் தொழிலாளிகள் வாழ்க்கை நிலையை உணர்ந்து கொள்ளலாம்.
  •  
  பொதுவுடைமைக் கவிஞரின் சிந்தனை எப்படி இருக்கும் என அறிந்து கொள்ளலாம்.
  •  
  கவிஞர் வாழும் சூழல் கவிதைக்குக் கரு என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
  •  
  கவிதை மூலம் மக்கள் பண்பாட்டை அறியலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:10:25(இந்திய நேரம்)