தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.5 பட்டுக்கோட்டையார் பாடலில் இலக்கிய நயம்

  • 6.5 பட்டுக்கோட்டையார் பாடலில் இலக்கிய நயம்

    சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர்
    சிந்திடும் மலரே ஆராரோ
    வண்ணத் தமிழ்ச் சோலையே! மாணிக்கமாலையே
    ஆரிரரோ... அன்பே... ஆராரோ...
    (கே.ஜீவபாரதி (தொ.ஆ), பட்டுக்கோட்டையார் பாடல்கள், ப.158)

    என்ற தாலாட்டுப் பாடல் எத்தனை இலக்கியத் தரம் வாய்ந்ததாக உள்ளது!

    உவமைக்குச் சிறந்த பாடல்களைப் பட்டுக்கோட்டையாரிடம் காணலாம்.

    உழவனும் ஓயாத உழைப்பும்போல் நாமே
    ஒன்றுபட்டு வாழ்க்கையில் என்றுமிருப்போம்

    (பட்டுக்கோட்டையார் பாடல்கள் - ஒரு திறனாய்வு, பக்.135)

    இங்கே காதலைச் சொல்லுமிடத்தும் தம் தனிப்பட்ட சமூகக் கருத்தோட்டத்தை உவமையாகப் படைத்திருப்பது சிறப்பிற்குரியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)