தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

 • 4.6 தொகுப்புரை


  நண்பர்களே ! இக்காலச் சிறந்த கவிஞர்களுள் ஒருவரான சிற்பியின் கவிதைகள் பற்றிய சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திப் பாருங்கள் :

  • சிற்பி என்னும் கவிஞரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.
  • சிற்பியின் கவிதைப் படைப்புகள் எவை என்பது பற்றிய தகவல்களை அறிய முடிந்தது.
  • அவரது கவிதைப் படைப்புக்குப் பொருளாய் அமைந்த உள்ளடக்கங்கள் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.
  • அவரது கவிதைகளில் வெளிப்படும் சமூக உணர்வு, அழகியல் உணர்வு, மனித நேயம், இயற்கை நல ஈடுபாடு முதலியவை பற்றி உணர்ந்து கொள்ள முடிந்தது.
  • அவரது கவிதைகளில் அமைந்துள்ள சொல்லாட்சி, உவமை, உருவகம் போன்ற இலக்கிய அழகுகளை அறிந்து கொள்ள முடிந்தது.
  • சிற்பி என்னும் கவிஞரின் தனித்தன்மையை அவரது கவிதைகள் வழி உணர்ந்து கொள்ள முடிந்தது.

  தன்மதிப்பீடு : வினாக்கள் - II
  1)
  சிற்பியின் ‘சிகரங்கள் பொடியாகும்’ என்னும் கவிதை யார் கதையைச் சொல்கிறது?
  2)
  ‘நாய்க்குடை’ என்னும் கவிதை எதைப் பற்றியது?
  3)
  குழந்தைப் பாடலில் சிற்பி தரும் அறிவுரை என்ன?
  4)
  சிற்பியின் கவிதைகளில் இருந்து நீங்கள் பெறும் நல்ல கருத்துகள் இரண்டு கூறுக.
  நூல்கள் பட்டியல்


  1. நிலவுப் பூ
  2. சிரித்த முத்துக்கள்
  3. ஒளிப்பறவை
  4. சர்ப்ப யாகம்
  5. புன்னகை பூக்கும் பூனைகள்
  6. மௌன மயக்கங்கள்
  7. சூரிய நிழல்
  8. இறகு

  இந்த நூல்கள் அனைத்தும் :

  கோலம் வெளியீடு 50,
  அழகப்பா குடி அமைப்பு
  பொள்ளாச்சி
  6422 001
  தமிழ்நாடு.

  என்னும் முகவரியில் கிடைக்கும்

  அல்லது

  விஜயா பதிப்பகம்
  20, ராஜவீதி
  கோயம்புத்தூர்
  தமிழ்நாடு

  என்னும் முகவரியிலும் பெறலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 11:29:55(இந்திய நேரம்)