Primary tabs
1.0 பாட முன்னுரை
நண்பர்களே ! சிற்றிலக்கியம் - 1 என்ற பாடப் பகுதியில் நாம் தமிழ்விடு தூது, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, பெரிய திருமடல், திருக்காவலூர்க் கலம்பகம் ஆகிய சிற்றிலக்கியங்களைப் பற்றி விரிவாகப் படிக்கப் போகிறோம்.
சிற்றிலக்கியம் என்பது தமிழ்மொழியில் காணப்படும் இலக்கிய வகைமைகளில் ஒன்று. தமிழில் சங்க இலக்கியம், நீதி இலக்கியம், பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம், புராண இலக்கியம், சிற்றிலக்கியம், உரைநடை இலக்கியம் என்று பல இலக்கிய வகைமைகள் உள்ளன. அவற்றுள் ஒன்றே சிற்றிலக்கியம் ஆகும்.
இந்தப் பாடம் சிற்றிலக்கியம் என்பது என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும்படி அறிமுகப்படுத்துகிறது.