தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Illakanam-சிற்றிலக்கியத்தின் வகைப்பாடுகள்.

 • பாடம் - 2

  P10332 சிற்றிலக்கியத்தின் வகைப்பாடுகள்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடுவதற்குரிய இலக்கிய வகைகளுள் சிலவாகிய குறவஞ்சி, தூது, மடல், உலா, பள்ளு, கலம்பகம் ஆகியவை பற்றிய பொதுவான சில செய்திகளைத் தருகின்றது.

  குறவஞ்சி என்னும் இலக்கிய வகையின் பெயர்க்காரணம், நூல் பெயர் பெறும் முறை, தோற்றம், வளர்ச்சி, முதல் நூல், அமைப்பு என்பன பற்றிக் கூறுகின்றது.

  அவ்வாறே, தூது, மடல், உலா, பள்ளு, கலம்பகம் ஆகிய இலக்கிய வகைகளின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு, உள்ளடக்கம் முதலிய செய்திகளை விளக்குகிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும் பொழுது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

  • சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகிய குறவஞ்சி இலக்கியம், அதன் பெயர்க்காரணம், பெயர் பெறும் முறை, தோற்றம், வளர்ச்சி, அமைப்பு என்பன பற்றித் தெளிவாக அறிந்து கொள்வீர்கள்.
  • மற்றொரு சிற்றிலக்கிய வகை ஆகிய தூது என்பதன் சிறப்புகளை விளங்கிக் கொள்ளலாம்.
  • மடல் என்பதன் பெயர்க்காரணம், மடல் ஏறுதல் பற்றிய செய்திகள், வேறு பெயர்கள், மடல் இலக்கிய மரபு, இந்த மரபில் ஏற்பட்டுள்ள மாற்றம், வளர்ச்சி என்பன பற்றிய விளக்கங்களைப் பெறலாம்.
  • உலா என்ற இலக்கிய வகையின் பெயர்க்காரணம், இலக்கணம், தோற்றம், வளர்ச்சி, பிற செய்திகள் என்பனவற்றை இனம் காணலாம்.
  • பள்ளு இலக்கிய வகையின் தோற்றமும், வளர்ச்சியும், அதில் கூறப்படும் செய்திகள், பண்புகள் முதலியனவற்றை அறிந்து கொள்ளலாம்.
  • கலம்பகத்தின் பெயர்க்காரணம், சொல் அமைப்பு, தோற்றம், வளர்ச்சி, கலம்பக உறுப்புகள், பாடல் எண்ணிக்கை, சிறப்புகள் முதலியன விளங்கும்.

  பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:32:22(இந்திய நேரம்)