தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2:7-தொகுப்புரை

  • 2.7 தொகுப்புரை

    நண்பர்களே! இதுவரை தமிழ்மொழியில் காணப்படும் சில சிற்றிலக்கிய வகைகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்துள்ளீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

    குறவஞ்சி, தூது, மடல், உலா, பள்ளு, கலம்பகம் ஆகிய சிற்றிலக்கிய வகைகளின் பெயர்க்காரணம் பற்றித் தெரிந்திருப்பீர்கள்.
    இந்த இலக்கிய வகைகளின் தோற்றம், வளர்ச்சி பற்றி அறிந்திருப்பீர்கள்.
    இந்த இலக்கிய வகைகளின் இலக்கணம் பற்றி உணர்ந்திருப்பீர்கள்.
    இந்த இலக்கிய வகைகளின் அமைப்பையும், இவற்றில் கூறப்படும் செய்திகளையும் புரிந்துகொண்டிருப்பீர்கள்.
    இந்த இலக்கிய வகைகளின் சிறப்புகளுள் சிலவற்றை அறிந்திருப்பீர்கள்.
    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.

    மடல் என்று இந்த இலக்கிய வகைக்குப் பெயர் ஏற்படக் காரணம் யாது?

    2.

    மடல் எந்த உருவத்தில் செய்யப்பட்டிருக்கும்?

    3.

    மடல் இலக்கிய வகையில் தோன்றிய முதல் நூல்கள் யாவை?

    4.

    பெண்கள் மடல் ஏறுதல் எப்போது காட்டப்படும்?

    5.

    உலா இலக்கியம் என்ற பெயர்வரக் காரணம் யாது?

    6.

    உலா இலக்கியத்தில் இடம் பெறும் இரு நிலைகள் யாவை?

    7.

    உலா இலக்கியத்தில் பாட்டுடைத் தலைவர்களாக அமைவோர் யாவர்?

    8.

    முதல் உலா இலக்கிய நூல் யாது?

    9.

    பள்ளு இலக்கியம் என்று பெயர்வரக் காரணம் யாது?

    10.

    உழவர்கள் உழவுத் தொழிலின் போது பாடும் பாடல்கள் யாவை?

    11.

    பள்ளு இலக்கிய வகையில் முதல் நூல் யாது?

    12.

    பள்ளு இலக்கியத்தின் வேறு பெயர்களில் இரண்டினைக் கூறுக.

    13.
    கலம்பகம் என்று இந்த இலக்கிய வகைக்குப் பெயர் ஏற்படக் காரணம் யாது?
    14.

    கலம்பக இலக்கிய வகையின் முதல் நூல் யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 15:52:27(இந்திய நேரம்)