தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Saivam - -பெரியபுராணம்

 • E
  பாடம் - 4

  P20214 - பெரிய புராணம்  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


  இப்பாடம் பன்னிரு திருமுறைகளுள் பெரிய புராணத்துக்குரிய சிறப்பிடத்தையும் தனித்தன்மையையும் விரிவாக விளக்குகிறது. இறைவனுக்கு நிகரான அவன் அருள்பெற்ற அடியார்களும் சிறப்புப் பெறுவதைச் சுட்டிக் காட்டுகிறது.

  பெரியபுராணம் காப்பியப் பண்புகளைப் பெற்றிருப்பதை இப்பாடத்தில் கற்கலாம். தொகையடியார், தனியடியார் ஆகியோரின் அறிமுகமும் இப்பாடத்தில் கிடைக்கிறது.

  சைவ சமயக் கோட்பாடுகள் பெரியபுராணத்தில் இடம் பெறுவதையும் அது ஒரு வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்வதையும் சமூக நோக்குடைய காப்பியமாக விளங்குவதையும் இப்பாடம் சுட்டிக் காட்டுகிறது.

  சைவ சமயத்திற்குப் பெருந்தொண்டாற்றிய மங்கையர்க்கரசியார், திலகவதியார், காரைக்கால் அம்மையார் போன்ற சைவ சமயப் பெண் தொண்டர்களையும் இப்பாடம் அறிமுகம் செய்கிறது.  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


  பன்னிரு திருமுறைகளுள் பெரிய புராணத்துக்கு உரிய சிறப்பிடத்தையும், அதன் தனித்தன்மையையும் உள்ளவாறு இனம் காணலாம்.

  தனித்தனி அடியவர்  வரலாறுகளை ஒரு பெருங்காப்பியமாக உருவாக்கியிருக்கும் நூலாசிரியர் சேக்கிழாரின் படைப்பாற்றலைச் சுட்டிக் காட்டலாம்.

  உணர்வுக்கு மட்டுமே வரும் என்று கருதப்பட்டிருந்த பக்தி அனுபவத்தை வார்த்தைகளுக்குள் கொண்டு வந்து படிப்பவர்களுக்கு அவ்வனுபவத்தைக் கிடைக்கச் செய்யும் பெரியபுராணத்தின் பெருஞ்சிறப்பினை இனங்கண்டு போற்றலாம்.

  இறைவனுக்கு நிகராக, அவன் அருள்பெற்ற அடியார்களையும் ஒளியூட்டும் போதே ஒரு சமயம் புதிய மறுமலர்ச்சி அடையும் என்ற உண்மையை அடையாளம் காணலாம்.

  பெரியபுராணம் ஏறத்தாழ ஓர் ஐந்நூறு ஆண்டுக்கால வரலாற்றுக்கு ஒளியூட்டும் - வரலாற்றுக் கருவூலம் என அதன் சிறப்பினைப் பகுத்துக் காணலாம்.

  தமிழர் வாழ்வியல், பண்பாடு, தனி மனிதப் பண்புகள், பிறர்க்குத் தொண்டு செய்து மகிழ்தல் முதலிய பண்பாட்டுப் பதிவுகளைத் தொகுத்துக் காணலாம்.

  பெண்மை பெரியபுராணத்தில் பெற்றிருக்கும் சிறப்பிடத்தையும், சைவத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகளையும் அடையாளங்கண்டு பட்டியலிடலாம்.

  தமிழ்ச் சைவ வரலாற்றில் பெரியபுராணம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை இனங் காணலாம்.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:13:36(இந்திய நேரம்)