தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Saivam - 4.0 பாட முன்னுரை-4.0 பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை

    சைவத்திருமுறைகள் பன்னிரண்டில் நிறைவாக அமைந்திருப்பது பெரியபுராணம். இதனைத் திருத்தொண்டர் புராணம் என்றும், திருத்தொண்டர் மாக்கதை என்றும் கூறுவர். இதன் ஆசிரியர் சேக்கிழார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழி நூலாகவும் கொண்டு, பெரிய புராணம் ஒரு பெருங்காப்பியமாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு காண்டங்களையும் 13  சருக்கங்களையும், 4287 விருத்தப்பாக்களையும் இந்நூல் கொண்டுள்ளது. 63 தனியடியார்கள் வரலாறுகளும், 9 தொகையடியார்களது சிறப்புகளும் இந்நூலுள் விரித்துரைக்கப்படுகின்றன. சமய - சமூகப் பண்பாட்டு வளர்ச்சியில் இந்நூல் ஆற்றியிருக்கும் பெரும்பங்கு கருதி ஒரு தனிப் பாடமாகப் பெரியபுராணச் செய்திகள் இங்கே விரித்துரைக்கப்படவுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 13:23:00(இந்திய நேரம்)