தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P2032-P20326 தற்காலத் தமிழ் நாவல்களின் போக்கு

 • பாடம் - 6
  P20326 தற்காலத் தமிழ் நாவல்களின்
  போக்கு

  E
  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  இந்தப் பாடம் தற்காலத் தமிழ் நாவல்களின் நிலை, அவற்றில் கூறப்படும் செய்திகள் ஆகியவற்றைக் கூறுகிறது. குறிப்பாக இன்றைய தமிழ் நாவல்களில் தலித்தியம், பெண்ணியம், சமூகம், சாதியம், பின் நவீனத்துவம் போன்ற செய்திகளை விளக்குகிறது. தமிழ் நாவல்களின் இன்றைய போக்கு எதை நோக்கி இருக்கிறது என்பதைக் கூறுகிறது.


  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  • இந்தப் பாடத்தின் மூலம் இன்றைய தமிழ் நாவல்கள் எத்தகு சமூக விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை அறியலாம்.

  • இன்றைய பெண்களின் உரிமைப் போராட்டம், சமூகத்தில் அவர்களுக்கு உள்ள இடம், ஆணாதிக்கத்தில் அவர்கள் படும் துன்பம் ஆகியவை பற்றியும், தலித் மக்கள் இன்று வரை அனுபவித்து வரும் கொடுமைகள், அக்கொடுமைகளில் இருந்து மீள்வதற்கான அவர்களின் போராட்டம் ஆகியவை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

  • இன்றைய தமிழ் நாவல்கள் சமூகப் பிரச்னைகளை எவ்வாறு அணுகுகின்றன என்பதையும் அறியலாம். தமிழ் நாவல்கள் இன்று எந்தத் திசையில் செல்கின்றன என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:23:32(இந்திய நேரம்)