தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 6.8 தொகுப்புரை

    தமிழில் நாவல் இலக்கியம் தோன்றிய காலம் முதல் இன்று வரை பல்வேறு பரிமாணங்களை அடைந்துள்ளது. பிரதாப முதலியார் சரித்திரம் காலம் முதல் பின்நவீனத்துவக் காலம் வரை தமிழ் நாவலின் போக்குகளில் அடைந்த மாற்றங்களை இப்பாடத்தில் நாம் கண்டோம்.

    சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர், ஆண்களால் அடக்கப்படும் பெண்கள் பற்றிச் சமீப கால நாவல்கள் நிறைய சொல்லத் தொடங்கியுள்ளன. இவ்வகையில் பெண்ணிய நாவல்களும் தலித்திய நாவல்களும் சமூக அக்கறையுடன் எழுதப்பட்டுள்ளன. அவை வெகு மக்களின் வாசிப்புக்கும் பெருமளவில் உள்ளாகின்றன.

    கதை சொல்லும் முறையால் அநியாயத்தையும் நியாயப்படுத்தி விட முடியும். இத்தகு சூழலில் காலவரிசையில் ஒரு கதை சொல்வதைத் தவிர்க்க பின்நவீனத்துவம் முன் வந்தது.

    இன்னும் எதிர்காலத்தில் தமிழ் நாவல்கள் புதிய வடிவங்களில், புதிய செய்திகளுடன் நிறைய வெளிவருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.



    1.

    தலித் பெண்கள் படும் இன்னல்கள் குறித்த நாவல்களைப் பற்றிக் கூறுக.

    2.
    ‘தலித்’ - விளக்குக.
    3.
    ‘தமிழில் தலித் நாவல்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.
    4.
    தமிழில் எதார்த்த நாவல்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.
    5.
    தமிழில் பின்நவீனத்துவ நாவல்கள் குறித்து எழுதுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-09-2017 17:47:12(இந்திய நேரம்)