Primary tabs
-
3.6 தொகுப்புரை
தொன்மை நாடகப் போக்குகளிலிருந்து விடுபட்டதாகத் தற்கால நாடகப் போக்குகள் உள்ளன.
புராண, இதிகாச நாடகங்கள், நாடகம் முழுவதும் பாடல்கள் என்ற தொன்மைப் போக்கின் பிடியிலிருந்து தற்கால நாடகங்கள் விலகின.
சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கி அ.மங்கை வரை புதிய நாடகப் போக்குகள் பல திசைகளிலும் பயணம் செய்யக் காண்கிறோம்.
ஒளி, ஒலி, ஒப்பனை, விளம்பரம், கதையமைப்பு, காட்சியமைப்பு, மேனாட்டுத் தாக்கம் எனப் பல நிலைகளிலும் தற்கால நாடகங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளன.
நவீன நாடகங்கள் அரங்குகளை விட்டு மக்களைத் தேடிச் செல்கிறது. பெண்கள் நாடக ஈடுபாடு கொண்டு நாடகத்தில் நடிக்கின்றனர்.
சபா நாடகங்கள் பெருகி வருகின்றன. அயலகத் தமிழர்கள் உலகெங்கும் நாடகங்களை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களும் நாடகத் துறைகளை ஏற்படுத்தியுள்ளன.