தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.5 தொகுப்புரை

  • 3.5 தொகுப்புரை

    இதழ்களில், தலையங்கம் என்பது குறிப்பிடத்தக்க முக்கியப் பகுதியாக அமைகிறது. ஒர் இதழின் இருப்பையும், விற்பனையையும், எண்ணத்தையும், நோக்கத்தையும் எடுத்துரைப்பது தலையங்கம். இதழ் ஆசிரியரும், படிப்பவர்களும் தொடர்பு கொள்ளும் பகுதியாக இஃது அமைகிறது. நாளிதழ், வெகுசன இதழ், சிற்றிதழ் என்று அனைத்து இதழிலும் தலையங்கம் அனைவருக்கும் புரியும் நிலையில் அமையும். பல வகைகளில் அமையும். தலையங்கத்திற்கென்று ஓர் அமைப்பு முறை, அமைவிடம் உண்டு என்பன இப்பாடத்தில் விளக்கப்பட்டன.
     

    1.

    தலையங்கத்தின் அமைப்பு எத்தனை பகுதிகளைக் கொண்டது? அவை யாவை?

    2.

    தலையங்க அமைப்பில் முடிவு என்றால் என்ன? இதன் இன்றியமையாப் பண்பு யாது?

    3.

    தலையங்கத் தலைப்பு, பொதுவாக எதன் அடிப்படையில் அமையும்?

    4.

    நாளிதழ்களில் தலையங்கம் எந்தப் பக்கத்தில் இடம் பெறுகிறது?

    5.

    ‘தலையங்கம்’ என்ற பெயரிலே தலையங்கம் அமையும் இதழ் ஒன்றனைக் குறிப்பிடுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 17:20:31(இந்திய நேரம்)