Primary tabs
-
1.2 திருத்தக் குறியீடுகளின் பிரிவுகள்
பிழைகள் உள்ள அச்சுப்படியைத் திருத்துவதற்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான குறியீடுகள் (Symbols) உள்ளன. இவை இந்திய மொழிகளிலும் ஆங்கில மொழியிலும் கையாளப்படுகின்றன.
அச்சுப்படி திருத்தக் குறியீடுகளை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். அவை:
(1) பொதுவானவை (General)
(2) நிறுத்தக்குறியீடுகள் தொடர்பானவை (Punctuations)
(3) இடைவெளி தரவேண்டியவை (Spacing)
(4) இணைக்க வேண்டியவை (Alignment)
(5) எழுத்து வடிவம் (Type/Font)என்பவையாகும்.
1.2.1 பொதுவானவை
Dt-அச்சடித்திருக்கும் சொல்லையோ எழுத்தையோ நீக்குக.Stet-ஏற்கெனவே உள்ளது போலவே இருக்கட்டும்.^-சொல்லையோ எழுத்தையோ இந்தக் குறிப்பிட்ட இடத்தில் சேர்த்துக் கொள்க.x-சரியாக விழாமல் உள்ள எழுத்துக்களை மாற்றுக.//-செங்குத்தாக உள்ளவற்றைச் சரிசெய்க.[-புதிய பத்தி (New Paragraph) தொடங்குக.1.2.2 நிறுத்தக் குறியீடுகள்
,/-கால் புள்ளியைச் சேர்க்கவும்.;/-அரைப் புள்ளியைச் சேர்க்கவும்./-முற்றுப்புள்ளி இடவும்.?/-கேள்வி அடையாளம் இடவும்.!/-ஆச்சர்யக் குறியைச் சேர்த்துகொள்ளவும்.:/-இரண்டு புள்ளிகளைச் சேர்க்கவும்.‘/-ஒற்றை மேற்கோள் அடையாளம் இடவும்.1.2.3 இடைவெளி தரவேண்டியவை
-சொற்களை அல்லது எழுத்துகளைச் சேர்க்க. இடைவெளி விட வேண்டாம்.#-பத்திகளுக்கிடையில், வரிகளுக்கிடையில் அல்லது சொற்களுக்கிடையில் இடைவெளி தருக.1.2.4 இணைக்க வேண்டியவை
-இடது பக்கம் தள்ளவும்-வலது பக்கம் தள்ளவும்T-மேலே உயர்த்தவும்-கீழே தள்ளவும்-பத்திகளை இணைக்கவும்-சொல்லைப் பிரித்துத் தரவும்-ஒற்றை மேற்கோள் குறியீடு இடுக-இரட்டை மேற்கோள் குறியீடு இடுக1.2.5 எழுத்து வடிவம்
S.C-பெரிய எழுத்தில் உள்ளதைச் சிறிய எழுத்தில் மாற்றுகCaps-பெரிய எழுத்தில் மாற்றுகbold-தடித்த எழுத்தில் மாற்றுகtrs-வார்த்தைகள், எழுத்துகளை மாற்றுகl.c.-சிறிய எழுத்தில் அச்சிடுகஅச்சுப்பிழை திருத்துவோர் அச்சுப்படியில் பிழையுள்ள இடத்தில் ஒரு சாய்ந்த கோடிட்டு (/) அடித்தல் வேண்டும். வலது, இடது பக்க ஓரங்களில் அச்சுப் பிழை திருத்திக் குறியீடுகளை எழுதி என்ன திருத்தம் என்பதைக் குறிப்பிட வேண்டும்.