Primary tabs
5.4 இயற்கை வருணனை
காப்பியங்களில் இயற்கை வருணனைகள் இடம் பெறுவது இயல்பு, இயற்கை இனிமையானது, இன்பந்தருவது. வருணனைகளில் அணிகளை அமைத்துப் பாடுவர் கவிஞர். வண்ணக்களஞ்சியப் புலவர் உவமையும் உருவகமும் கலந்து இயற்கை வருணனையைப் பாடுகிறார்.
5.4.1 சோலையும் மன்னனும்
சுலைமான் நபி ஒரு சோலைக்கு வந்தார். அந்தச் சோலையை ஒரு சிறு மன்னனாகப் புலவர் உருவகப்படுத்துகிறார். பெரிய மன்னரான, இராஜ நாயகரான சுலைமான் நபி, அச்சோலைக்கு வருவதால் சோலையான சிறு மன்னன் தனது வரியைச் (Tax) செலுத்துவதாகப் பாடுகிறார்.
சுலைமான் நபி காலடியில் மகிழ மலர்கள் உதிர்கின்றன. அவை, அந்தச் சோலையாகிய சிற்றரசன் வரியாகச் செலுத்தும் பட்டை தீட்டிய பதுமராக மாணிக்கக் கற்களாகக் காட்சி தருகின்றன. புன்னை அரும்புகள் முத்துகளாகக் காட்சி அளிக்கின்றன. புலவரின் உருவகக் கற்பனை அழகாக அமைந்துள்ளது.
எழில் பொழின் மன்னன்
திருந்து சாணை செய்பதும
ராகங்களைத் திறையாகப்
பொருந்தவே இடற்கு இணைதரு
மகிழலர் புன்னை
அரும்பு எலாந்தர ளங்களை
இடுவது ஒத்தருளும்
(எறும்புகள் விருந்திடு படலம் -6)
(எழில் = அழகு, பொழில் = சோலை, சாணை = பட்டை தீட்டுதல், திறை = வரி, பதுமராகம் = நவமணிகளில் ஒன்று, அரும்பு = பூக்கள்; தரளம் = முத்து)
என உவமையும் உருவகமும் இணைந்த இப் பாடல்மூலம் இயற்கை வருணிக்கப்படுகிறது. இவ்வாறு காப்பியத்தின் பல இடங்களில் இயற்கை வருணனை மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
5.4.2 பளிங்கும் கண்களும்
தளம்குளிர் புனல்என நெடிய
கருவிழி இரண்டு கயல்எனத் தோன்றக்
கண்டுவந்து உடல்அசை யாது
விரிசிறை அசைத்துஅந்த ரத்தின்நின்று எழில்சேர்
மீன்எறி பறவைவீழ்ந் திடுமே
(நகரப் படலம் 3 : 13)
(கயல் = மீன், சிறை = சிறகு, எழில் = அழகு, தளம் = தரை, புனல் = தண்ணீர், விழி = கண்)
இவ்வாறு புலவரின் கற்பனைத் திறம் சிறப்புற அமைந்து வியப்பும் மகிழ்ச்சியும் அடையச் செய்கிறது.